கோலாலம்பூர்:
எலான் மஸ்க்-கின் (Elon Musk) செயற்கை நுண்ணறிவு நிறுவனமான, `எக்ஸ்.ஏ.ஐ.’ (xAI), தனதுத் தரவு குறிப்பு குழுவிலிருந்து (data annotation team), சுமார் 500 ஊழியர்களை, பணி நீக்கம் செய்துள்ளது.
பொதுவானச் செயற்கை நுண்ணறிவு கற்பிப்பிலிருந்து, வீடியோ விளையாட்டுகள் (video games), மருத்துவம், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் (STEM) போன்றத் துறைகளில், சிறப்பு நிபுணத்துவச் செயற்கை நுண்ணறிவு கற்பிப்பில், கவனம் செலுத்த, நிறுவனம், முடிவு செய்துள்ளதால், இந்த நடவடிக்கை, எடுக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை இரவு, மின்னஞ்சல் மூலம், இந்தத் தகவல், ஊழியர்களுக்கு, தெரிவிக்கப்பட்டது. . இருப்பினும், அவர்களின் சம்பளம், ஒப்பந்தம் முடியும் வரை அல்லது நவம்பர் முப்பதாம் தேதி வரை, வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மஸ்க், குரோக்’ (*Grok*) என்ற, எக்ஸ்.ஏ.ஐ.-னால், உருவாக்கப்பட்டச் செயற்கை நுண்ணறிவுத் தளத்தை, தொடர்ந்து, முன்னிலைப்படுத்தி வருகிறார்.
உலக நிகழ்வுகள் குறித்த, அதன், முன்கணிப்புத் திறன்களை, ஃபியூச்சர்எக்ஸ்’ (FutureX) தளம் மூலம், சோதிக்குமாறு, அவர், `எக்ஸ்’ (X) பயனர்களை, கேட்டுக்கொண்டார்.


















