புயலால் பாதிக்கப்பட்டது கிராமம்.

மக்களே மக்களுக்குச்  செய்த காரியம்..

ஒரு கை உனக்கும் மறு கை மக்களுக்கும் என்பார்கள். அதை நிரூபிக்கும் வகையில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம் ஓர் உதாரணமாய் விளங்குகிறது.

சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு கிராமம் கடந்த வாரத்தில் ஏற்பட்ட புயலால் கடும் பாதிப்படைந்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் உள்ள Neuchatel என்ற மாகாணத்தில் இருக்கும் Cressier என்ற கிராமத்தில் கடந்த வாரம் புயல் ஏற்பட்டுள்ளது. இதனால் கிராம மக்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர்.

இதில் பல வீடுகளில் பெருவெள்ளம் புகுந்து சகதி ஏற்பட்டு, வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அந்த கிராமத்திலுள்ள மக்களே, அந்த வீடுகளை சுத்தம் செய்து, அவர்களுக்கு குடிக்க தண்ணீர் அளித்து, துணிகளை துவைத்து கொடுத்துள்ளார்கள்.

மேலும் அந்த ஊரில் உள்ள ஒரு உணவகத்தின் உரிமையாளர், சமைக்க முடியாத நிலையில் உள்ள வீடுகளுக்கு இலவச உணவு கொடுத்து வருகிறார். இதற்காக தனக்கு கிராம மக்கள் பணம் கொடுத்து உதவுவதாக அவர் கூறியுள்ளார். மேலும் மக்களுக்கு கொடுப்பதற்காக அந்த ஊரில் உள்ள தபால் நிலையத்திற்கும் உணவு கொடுக்கப்படுகிறது.

இந்நிலையில் 63 வயதான பெண்மணி ஒருவர், என் வீட்டில் வெள்ளம் சூழ்ந்து பாதிப்படைந்த போது அதிக மக்கள் தனக்கு உதவி செய்ததாக கண்ணீர் மல்க நன்றி கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here