பி60 தரப்பு மக்களுக்கு மாதம் வெ. 1,500 தருக-அன்வார் கோரிக்கை

கோலாலம்பூர் –

பி40 தரப்பு மக்களையும் எம்40ஐச் ஙே்ர்ந்த பாதி அளவு மக்களையும் உள்ளடக்கிய பி60 பிரிவைச் ஙே்ர்ந்த மக்களுக்கு மாதாந்திர ரொக்க உதவித் தொகை வழங்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று பரிந்துரைத்தார்.

தற்போது அரசாங்கம் அறிவித்திருக்கும் நேரடி உதவிகள் வெறும் தந்திரமே அன்றி வேறு எதுவும் இல்லை. எனவே முழு ஊரடங்கு காலத்தில் 60 விழுக்காட்டு அடித்தட்டு மக்களுக்கு இதுபோன்ற உதவிகள் சென்றடைய வேண்டும் என்று கெஅடிலான் தேசியத் தலைவருமான அவர் சொன்னார்.

கோவிட்-19 நெருக்கடியாலும் பல்வேறு கட்டுப்பாடுகளாலும் இவர்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். சிறிய, நடுத்தர தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள், பணியாளர்கள், தனியார்துறை ஊழியர்கள் ஆகியோரும் அவர்களுள் அடங்குவர்.

நேரடியாக ரொக்கப்பண உதவி ஒரே முறையில் வழங்குவது போதுமானது அல்ல. எம்சிஓ உத்தரவு எவ்வளவு காலம் நீடிக்கிறதோ அல்லது இரண்டு மாதமோ மூன்று மாதமோ நீடிக்கிறதோ ஒவ்வொரு மாதமும் பி60 தரப்பைச் ஙே்ர்ந்த குடும்பங்களுக்கு 1,500 வெள்ளி வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

ஒரே முறையில் ரொக்கப் பண உதவி கொடுப்பதைவிட இது எவ்வளவோ சிறந்தது. ஒரே முறையில் கொடுக்கப்படும் ரொக்கப் பண உதவி வீடு, வாகனக் கடன்களைச் செலுத்துவது போன்ற கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கே பயன்படுத்தப்பட்டு விடும் என்று அன்வார் சொன்னார்.

அரசாங்கத்தின் உதவிகள் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கப் போதுமானவை அல்ல. முன்பு மாதம் 4,000 வெள்ளி வருமானம் பெற்றவர்கள் ஊரடங்கு காலத்தில் 20 விழுக்காட்டிற்கும் மேல் வருமானத்தை இழந்துள்ளனர் என்பதை ஆய்வுகள் காட்டுகின்றன.

அதே சமயம் மாதம் 2,000 வெள்ளி வருமானம் பெற்றவர்கள் அறவே வருமானம் இல்லாத நிலையை எதிர்நோக்கியுள்ளனர். கோவிட்-19 நெருக்கடி தொடர்கின்ற நிலையில் பொருளாதார சுழ்நிலை காரணமாக ஏறத்தாழ 50 லட்ங்ம் குடும்பங்கள் அல்லது ஒரு கோடியே 50 லட்சம் பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இது மிகப்பெரிய எண்ணிக்கையாகும். மக்கள் தொகையில் இது 50 விழுக்காட்டிற்கும் அதிகமாகும். அதாவது சீமார் 85 விழுக்காட்டினர் மலாய்க்காரர்களாகவும் பூமிபுத்ராக்களாகவும் உள்ளனர் என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here