பிரித்தானியாவில் 2 வாரத்துக்கு முன் காணாமல் போன மலேசியப்பெண்; தலையின்றி சடலமாக மீட்பு.

பிரித்தானியா, (ஜூலை 2) :

பிரித்தானியாவின் சல்கோம் காட்டுப்பகுதியில் கடந்த ஜூன் 27 அன்று போலீசாரால் தலையில்லாத பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  அச்சடலம் 2 வாரத்திற்கு முன்னர் காணாமல் போனதாக நம்பப்படும் மலேசியரான சோங் மீ குயென் (Chong Mee Kuen- 67) என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

மலேசியாவை பூர்வீகமாகக் கொண்ட டெபோரா என்று அழைக்கப்படும் திருமதி சோங், 2004 ஆம் ஆண்டு முதல் லண்டனில் வசித்து வந்தார் என்றும் ஜூன் 11 ஆம் தேதியன்று அவர் லண்டன் வெம்பலியிலுள்ள அவரது வீட்டிலிருந்து காணாமல் போயுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது என்றும் அவர் கடைசியாக ஜூன் 10 ல் லண்டனில் இருந்துள்ளார் பின்னர் என்ன நடந்தது என்பது தொடர்பில் போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றது.

சடலம் கண்டுபிடிக்கப்பட்ட குறித்த இடம் அவரது வீடு இருக்கும் (லண்டன்) இடத்திலிருந்து ஏறத்தாள 4 1/2 மணி நேரம் பயணிக்க வேண்டும்.

இங்கிலாந்தை தளமாகக் கொண்ட வக்கீல் குழுவான எண்ட் தி வைரஸ் ஆஃப் ரேசிசத்தின் கூற்றுப்படி, 2019 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கோவிட் -19 தொற்றுநோய் வெடித்ததில் இருந்து ஆசிய வம்சாவளியைச் சேர்ந்தவர்களுக்கு எதிரான வன்முறை வழக்குகளில் 300% அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here