புக்கிட் யோங்கில் அழுகிய நிலையில் சடலம் கண்டுபிடிப்பு

பாசீர் பூத்தே, (ஜூலை 3) :

புக்கிட் யோங்கில் உள்ள ஒரு தோட்டத்திற்கு அருகே அங்குள்ள கிராமவாசிகளால் நேற்று பிற்பகல் அழுகிய மற்றும் சிதைந்த நிலையில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

இவ்விடயம் தொடர்பாக கிளந்தான் துணை காவல்துறைத் தலைவர் அப்துல்லா முகமட் பியா கூறுகையில், குறித்த இடத்திலுள்ள தோட்டத்தின் வழியாகச் செல்லும்போது கிராமவாசிகள் துர்நாற்றம் வீசுவதை உணர்ந்ததாகவும் பின்னர் அது என்னவாக இருக்கும் என்று தேடியபோது மாலை 6.30 மணியளவில் அழுகிய மற்றும் சிதைந்த உடலைக் கண்டனர் என்றும் கூறினார்.

“இச்சடலத்தை கண்டுபிடித்ததும் குடியிருப்பாளர்கள் மாவட்ட காவல்நிலையத்திற்கு அறிவித்ததை தொடர்ந்து, புக்கிட் யோங் காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு விரைந்து செல்வதற்கு முன்னர் ஓர் போலீஸ் அறிக்கையை பதிவு செய்தனர்,” என்றும் அவர் கூறினார்.

கண்டுபிடிக்கப்பட்ட உடல் எட்டு துண்டுகளாக வெட்டப்பட்டதாகவும் ​​இந்த விடயம் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும், போலீஸ் தொடர்ந்து விசாரணை செய்து வருவதாகவும் அப்துல்லா கூறினார்.

மேலும் சடலங்கள் அழுகிவிட்டன என்றும் இவற்றை காட்டு விலங்குகள் சாப்பிடப்பட்டிருக்கலாம் என்றும் குறித்த சடலம் ஆணா பெண்ணா என்று தெரியவில்லை. இருப்பினும் தடயவியல் பிரிவைச் சேர்ந்த உறுப்பினர்கள் குழு சடலம் கண்டெடுக்கப்பட்ட இடம் குறித்து இன்னும் விசாரணை நடத்தி வருகிறது என்றும் கூறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here