மலேசியாவுக்கு 1 மில்லியன் தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்கியது அமெரிக்கா.

வாஷிங்டன், ( ஜூலை 4) :

மலேசியாவுக்கு 1 மில்லியன்  ஃபைசர் இன்க்ஸின் பயோஎன்டெக் நிறுவனம் உருவாக்கிய கோவிட் -19 ஒரு மில்லியன் தடுப்பூசிகளை அமெரிக்கா நன்கொடையாக வழங்கியுள்ளது.

இத்தடுப்பூசிகள் எதிர்வரும் திங்கட்கிழமை மலேசியாவுக்கு கிடைக்கும் என்று வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் மிக விரைவில் தென்கிழக்கு ஆசியாவிற்கு அதிக தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது .

அபிவிருத்தியடைந்த மற்றும் அபிவிருத்தியடந்து வரும் நாடுகளுக்கு இடையிலான தடுப்பூசி விகிதங்களில் உள்ள ஏற்றத்தாழ்வு குறித்த கவலையின் மத்தியில், உலக அளவில் பகிர்ந்து கொள்வதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம் கடந்த மாதம் உறுதியளித்தற்கு அமைவாக 80 மில்லியன் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளை ஆரம்ப கட்டமாக அனுப்பி வைக்கவுள்ளது.

“தடுப்பூசிகளை வழங்குவதனூடாக புவிசார் அரசியல் செல்வாக்கை ஆழப்படுத்தி தனது இராஜதந்திர உறவை பலப்படுத்தி, சீனாவுடன் போட்டி போட்டு வருகின்றது குறிப்பிடப்பட்டது. இருப்பினும் தாம் மற்ற நாடுகளிடமிருந்து உதவிகளைப் பெறுவதற்கோ அல்லது சலுகைகளைப் பெறுவதற்கோ தடுப்பூசிகளைப் பகிர்ந்து கொள்ளவில்லை என்று அமெரிக்கா கூறுகிறது, மேலும் உயிர்களைக் காப்பாற்றுவதற்கும் தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டு வருவதற்காகவே தாம் இந்த தடுப்பூசிகளை வழங்குவதாகவும் கூறுகின்றது.

வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் கிழக்கு ஆசியாவின் மூத்த இயக்குனர் எட்கார்ட் ககன் இந்த நன்கொடை தொடர்பில் கருத்துரைத்த போது, அமெரிக்கா மலேசியாவுடன் “பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பூசிகளை” பகிர்ந்து கொள்கிறது என்றும் “எதிர்காலத்தில் இத்தடுப்பூசிகள் மேலும் ஏற்றுமதி செய்யப்படும்” என்றும் கூறினார்.

அமெரிக்கா “தென்கிழக்கு ஆசியா முழுவதும் கூடுதல் தடுப்பூசிகளை வழங்க முடிந்தவரை வேகமாக செயல்பட்டு வருகிறது” என்று மற்றுமொரு அதிகாரி கூறினார்.

பிலிப்பைன்ஸ், வியட்நாம், இந்தோனேசியா, தாய்லாந்து, லாவோஸ், பப்புவா நியூ கினியா மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்கும் திட்டத்தை அமெரிக்கா ஏற்கனவே அறிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை (ஜூலை 2) கோவக்ஸ் உலகளாவிய தடுப்பூசி பகிர்வு திட்டத்தின் மூலம் இந்தோனேசியாவிற்கு நான்கு மில்லியன் டோஸ் மாடர்னா இன்க் (Moderna Inc) கோவிட் -19 தடுப்பூசியை விரைவில் அனுப்பும் என்றும் அது கூறியது.

மேலும் 80 மில்லியன் டோஸ் தடுப்பூசிகளை ஆப்பிரிக்க யூனியன் மற்றும் 92 குறைந்த மற்றும் குறைந்த நடுத்தர வருமான நாடுகளுக்கு விநியோகிக்க 500 மில்லியன் ஃபைசர் / பயோஎன்டெக் தடுப்பூசிகளை வாங்கப்போவதாக வாஷிங்டன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here