சாந்தி ராஜன்( மக்கள் ஓசை செய்தியாளர்)- லுமூட், (ஜூலை 4):
கடந்த சனிக்கிழமை இரவு வேளையில் நடந்த கடல் கொந்தளிப்பு சமயத்தில் புலாவ் ஜாராக் கடல் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த 41 வயது கம்போடிய நாட்டு மீனவர் பெக் போயின் கம்போடிய தூதரகப் பிரதிநிதியிடம் ஒப்படைக்கப்பட்டார்.
சம்பவம் நிகழ்ந்த இடத்தில் தற்செயலாகப் பயணித்த வர்த்தக கப்பல் ஒன்றிலிருந்து பெறப்பட்ட தகவலை அடுத்து, கடல் அமலாக்க போலீஸ் பிரிவு கடலில் தத்தளிக்க அம்மீனவரை மீட்டு கரை சேர்த்ததாக பேராக் கடல் அமலாக்க போலீஸ் இயக்குநர் கேப்டன் ஷரிஸான் ரஹ்மான் தெரிவித்தார்.








