ராமமூர்த்தி- மக்கள் ஓசை செய்தியாளர்,
மெந்தகாப் (ஜூலை 4) :
இங்குள்ள டாமாய் தாஹா அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் வசிக்கும் இரு சிறு பிள்ளைகளின் தாயான திலகா த/பெ பக்கிரிசாமி (28) என்பவரே வீட்டின் வரவேற்பறையிலுள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இவரின் கணவர் சிங்கப்பூரில் வேலை செய்து வருவதாக அங்கு வசிக்கும் சிலர் தெரிவித்தனர்.
இச்சம்பவம் நேற்றுக்காலை 9-10 மணிக்குள் நடந்திருக்கும் என நம்பப்படுகின்றது.தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக தெமர்லோ பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.




















