நாட்டில் அதிகமான இடங்களில் EMCO அமல்.

கோலாலம்பூர், (ஜூலை 4) :

நாட்டில் கோவிட் -19 புதிய தொற்றுக்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து நெகிரி செம்பிலான், சபா, கெடா, பகாங் மற்றும் கிளாந்தான் ஆகிய இடங்கள் உட்பட இன்னும் பல இடங்களுக்கு கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (EMCO) அறிவிக்கப்பட்டுள்ளது.

தாமான் டேசரியா, சிரம்பான் அத்துடன் தாமான் பண்டார் பாரு சுங்கை லாலாங், தாமான் லெம்பா  பெர்மாய் மற்றும் கெடாவில் உள்ள பத்து அராங் தொழில்துறை பகுதி (தாமான் சகாயா PKNK உட்பட) ஆகிய இடங்களில் நாளை (ஜூலை 5) முதல் ஜூலை 18 வரை EMCO அமல்படுத்தப்படுவதாக தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப்  தெரிவித்தார்.

மேலும் தாமான் சிபா, பிங்குல், பீஃபோர்ட் மற்றும் கம்போங் சிம்பாங்கான், கோத்தா மருடு, சபா அத்துடன் கம்போங் புக்கிட் தனா, முக்கிம்  புக்கிட் ஜாவா, பாசீர் பூத்தே, கிளாந்தான் ஆகிய இடங்களிலும் கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை விதிக்கப்பட்டுள்ளது.

முக்கிம் கோல குவாந்தான் 2, பகாங் ஆகிய இடங்களிலும் இன்று (ஜூலை 4) முதல் ஜூலை 17 வரை அமல்படுத்தப்படுகின்றது.

மேலும் தாமான் மெர்பாவ்  உத்தாமா, முக்கிம் புக்கிட் ஜாவா, செலின்சிங், பாசீர் பூத்தே, கிளாந்தான் ஆகிய இடங்களில் கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை  ஜூலை 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

கம்போங் ரஞ்சங்கான் சிலாபுகான் பெரிங்கட் 4, லஹாட் டத்தோ மற்றும் தாமான் டிகோட், பெனாம்பாங் மற்றும் கம்போங் நெலாயான், பத்து 10, சண்டாகான், சபாவின் பகுதி 1,2 இல் உள்ள இடங்களிலும் இந்த கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை  அமல் படுத்தப்படுகின்றது என்றும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here