கிருஷ்ணன் ராஜு ( மக்கள் ஓசை செய்தியாளர்)
பாசிர் கூடாங், (ஜுலை 5):
இங்குள்ள தஞ்சாங் லாங்சாட் தொழில்துறை பகுதியில் உள்ள ஒரு குழாய் உற்பத்தி தொழிற்சாலையில் குழாய்களில் வெல்டிங் பணிகளை மேற்கொண்டபோது ஒரு வெல்டர் தொழிலாளி மாண்டார்.
பாதிக்கப்பட்ட 35 வயது ஆடவர் 91 சென்டி மீட்டர் அகலம் மற்றும் 12 மீட்டர் நீளம் கொண்ட குழாயின் இரும்புத் துண்டுகளை அதிகாலை 5 மணிக்கு வெல்டிங் செய்து கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நேர்ந்தது என்று ஜோகூர் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை (ஜே.கே.கே.பி) இயக்குநர் முகமட் ரோஸ்டி யாகோப் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர் நின்று கொண்டு வெல்டிங் செய்ததாக விசாரணையில் தெரிய வருகிறது. இரண்டு குழாய்களும் 1 மீட்டர் தொலைவில் இருந்தன. பாதிக்கப்பட்டவரின் நண்பர் இரண்டு குழாய்களுக்கு இடையில் இருப்பதை உணராமல் குழாயை நகர்த்த சுவிட்சை தட்டிவிட்டதால் இந்த விபத்து ஏற்பட்டது என்று முகமது ரோஸ்டி சுட்டிக்காட்டினார்.
பாதுகாப்பான பணி நடைமுறைகளை மதிப்பாய்வு செய்து மேம்படுத்த முதலாளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.