மானிய விலை டீசல் மோசடி- 15 பேர் கைது

ஷா ஆலாம், ஆகஸ்ட் 12 :

சிலாங்கூர் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சகம் மற்றும் காவல்துறையினரின் ஒத்துழைப்பின் விளைவாக, இந்த வாரம் செமினி, கோத்தா டாமான்சாரா, காப்பார் மற்றும் பூச்சோங் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் மொத்தம் RM507,142 மதிப்புள்ள நான்கு மானிய விலை டீசல் கடத்தும் முயற்சி கண்டுபிடிக்கப்பட்டது.

மாநில தலமை அமலாக்க அதிகாரி, முகமட் கைரி ஜமாலுடின் கூறுகையில், ஆகஸ்ட் 9 அன்று மூன்று வழக்குகள் மற்றும் நேற்று ஒரு வழக்கு சம்பந்தப்பட்ட மொத்தம் நான்கு வழக்குகளை PDRM இலிருந்து அவரது தரப்பு பெற்றதாக கூறினார்.

முகமது கைரி மேலும் கூறுகையில், சம்பந்தப்பட்ட நான்கு வழக்குகளிலும் 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

“சிலாங்கூர் KPDNHEP தனிநபர்கள் அல்லது இந்த கும்பலின் நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபட்டுள்ள எந்தவொரு தரப்பினரையும் அடையாளம் காண சம்பந்தப்பட்ட நான்கு வழக்குகள் தொடர்பான மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுக்கும் என்றார்.

“அந்த நடவடிக்கையின் மூலம், 26,500 லிட்டர் மானிய விலையிலான டீசல், மோசடி நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒன்பது லோரிகள் என்பன பறிமுதல் செய்யப்பட்டன.

“ஒட்டுமொத்தமாக, நான்கு வழக்குகளுக்கும் கைப்பற்றப்பட்ட சொத்துக்களின் மதிப்பு RM507,142 என மதிப்பிடப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.

விநியோகக் கட்டுப்பாட்டுச் சட்டம் 1961 இன் கீழ் பிரிவு 20 (1), உட்பிரிவு 7(4), பிரிவு 21 மற்றும் ஒழுங்குமுறை 12A ஆகியவற்றின் படி இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது என்றார்.

“பெரும்பாலான முறைகேடுகளில், மானிய விலை டீசல் உட்பட்ட பொருட்கள் அருகிலுள்ள எரிவாயு நிலையங்களில் இருந்து பெறப்படுவதாக நம்பப்படுகிறது.

“KPDNHEP சிலாங்கூர் ஒரு விரிவான விசாரணையை மேற்கொள்ளும் மற்றும் சம்பந்தப்பட்ட சிண்டிகேட்களுடன் ஒத்துழைக்கும் எந்தவொரு எரிவாயு நிலையத்திற்கும் எதிராகவும் நடவடிக்கை எடுக்கும்” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here