யூடியூபர் மதன் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது

முகத்தை காட்டாமல் தனது ஆபாச சேனலில் பேசிவந்தவர் மதன். இவர் தற்போது குடும்பத்துடன் சிக்கியுள்ளார். சில தினங்களுக்கு முனனர், மதனின் மனைவி கைதான நிலையில் மதன்குமார் மாணிக்கத்தின் உல்லாச வாழ்க்கை அம்பலமானது.

கோடியில் புரண்ட மதன், தடைசெய்யப்பட்ட ஆன்லைன் பப்ஜி விளையாட்டின் போது, அடாவடி ஆபாசமாக யூடியூப் பக்கத்தில் பேசிவந்தார்.மூன்று ஆண்களுக்கு மேலாக முகத்தை காட்டாமல் தான் யார் என்ற அடையாளத்தை வெளிகாட்டாமல் ஆரவாரமாக ஆபாசமாக தனது யூடியூப் பக்கத்தில் பேசிவந்தார்.

இவரது பேச்சால் மூளைசலவை செய்யப்பட்ட சிலர் கண்மூடித்தனமாக இவரது ரசிகர்களாகினர்.மதனின் ஆபாச யூடியூபர் பற்றி நியூஸ் 18 தமிழ்நாடு செய்தி ஒளிப்பரப்பியது. அதன் அடிப்படையில் அதிகரித்த புகார்களின் அடிப்படையில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.இதனையடுத்து புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதன் மீது தற்போது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here