மின்சிகரெட்டுகள் கடத்திய குற்றச்சாட்டில் 14 மலேசியர்களுக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்தது.

சிங்கப்பூர், (ஜூலை 6):

சுமார் 2,100,000 (21 லட்சம்) வெள்ளி மதிப்­புள்ள மின்­சி­க­ரெட்­டு­க­ளை­யும் அவற்றுடன் தொடர்­புடைய சாத­னங்­க­ளை­யும் சிங்­கப்­பூ­ருக்­குள் கடத்திய குற்­றத்­திற்­காக 14 மலேசிய ஆட­வர்­க­ளுக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் சிறைத் தண்­டனை விதித்துள்ளது.

சுகா­தார அறி­வி­யல் ஆணை­ய­மும் (HSA) குடி­நு­ழைவு சோத­னைச் சாவடி ஆணை­ய­மும் (ICA) இணைந்து நேற்று (ஜூலை 5) இதனை தங்­க­ளது கூட்­ட­றிக்­கை­யில் தெரி­வித்­திருந்தன.

கைது செய்­யப்­பட்­ட­வர்­கள் 22 வய­துக்­கும் 54 வய­துக்­கும் இடைப்­பட்­ட­வர்­கள் என்றும் பிடி­பட்ட ஆட­வர்­கள் அனை­வ­ரும் மலே­சிய நிறு­வ­னத்­தைச் சேர்ந்த லோரி ஓட்­டு­நர்­கள் மற்­றும் அவர்களது உத­வி­யா­ளர்­களுமாவர்.

கடந்த ஜூன் 7 ஆம் தேதி , மலே­சி­யா­வி­லி­ருந்து சிங்­கப்­பூ­ருக்­குள் கோழி­களை ஏற்றி வரு­வ­தற்­குப் பயன்­ப­டுத்­தப்­பட்ட லோரி­களை குடி­நு­ழைவுச் சோத­னைச் சாவடி ஆணைய அதி­கா­ரி­கள் இடை­ம­றித்து சோதனை நடத்­தி­னர். அப்­போது மலே­சி­யா­வில் பதிவு செய்­யப்­பட்ட ஏழு லோரி­களில் தடை செய்­யப்­பட்ட பொருட்­கள் மறைத்து கடத்தி வரப்­பட்­டதை அதி­கா­ரி­கள் கண்­டு­பி­டித்­த­னர்.

லோரி ஓட்­டு­நர்­களும் லோரி­களில் இருந்த உத­வி­யா­ளர்­களும் சிங்­கப்­பூ­ரில் ஒரு குறிப்­பிட்ட இடத்­திற்கு அந்­தப் பொருள்­க­ளைக் கொண்டு செல்­லு­மாறு உத்தரவிடப்பட்டது என்று சுகா­தார அறி­வி­யல் ஆணை­யம் நடத்­திய விசா­ர­ணை­யில் தெரிய வந்­தது.

அங்­கி­ருக்­கும் நபர் ஒரு­வர் தடை செய்­யப்­பட்ட இந்­தப் பொருள்­க­ளைப் பெற்­றுக்­கொள்ள திட்­டம் வகுக்­கப்­பட்டு இருந்­ததாகவும் தெரியவருகின்றது.

54,392 மின்­சி­க­ரெட்­டு­களும் அவை தொடர்­பான சாத­னங்­களும் லோரி­களில் கடத்தி வரப்­பட்­டது தொடர்­பாக 14 மலேசிய ஆடவர்கள் கைது செய்­யப்­பட்டு ,கடந்த வாரம் திங்­கட்­கி­ழமை (ஜூன் 28) அவர்­க­ளுக்கு வெவ்­வேறு கால­கட்ட சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது. அதி­க­பட்­ச­மாக இரு மாத சிறைத் தண்­டனை விதி­கப்­பட்­டது.

கைப்­பற்­றப்­பட்ட பொருள்­க­ளின் மதிப்பு சுமார் 21 இலட்சம் வெள்ளியாகும். சிங்­கப்­பூ­ரில் அதிகமான அள­வு மின்­சி­க­ரெட்­டு­கள் கைப்­பற்­றப்­பட்டு இருப்­பது இதுவே முதல்­முறை என்றும் HSA தெரிவித்தது .

மின்­சி­க­ரெட்­டு­க­ளை­யும் அவை தொடர்­பான சாத­னங்­க­ளை­யும் இறக்­கு­மதி செய்­வது, விநி­யோ­கம் செய்­வது, விற்­பது, விற்­ப­னைக்­காக வைத்­தி­ருப்­பது போன்­றவை குற்­றங்­க­ளா­கும்.

முதல்­முறை இக்­குற்­றங்­களில் ஈடு­பட்டு நீதி­மன்­றத்­தில் குற்­ற­வாளி என உறுதி செய்­யப்­ப­டு­வோ­ருக்கு $10,000 சிங்கப்பூர் டாலர் (ஏறத்தாழ 30,000 வெள்ளி) வரை­யி­லான அப­ரா­தம், ஆறு மாதம் வரை­யி­லான சிறை போன்­றவை தண்­ட­னை­க­ளாக விதிக்­கப்­ப­ட­லாம். மறு­முறை இதே குற்­றங்­களில் ஈடு­ப­டு­வோ­ருக்­கான தண்­டனை இரட்­டிப்­பா­கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே­போல தடை செய்­யப்­பட்ட புகை­யி­லைப் பொருள்­களை வாங்­கு­வ­தும் பயன்­ப­டுத்­து­வ­தும் குற்­றங்­க­ளா­கும். அந்­தக் குற்­றங்­க­ளுக்கு $2,000 சிங்கப்பூர் டாலர் (ஏறத்தாழ 6,000 வெள்ளி) வரை அப­ரா­தம் விதிக்­கப்­ப­ட­லாம் என்றும் சிங்கப்பூர் ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here