சர்ச்சையில் சிக்கினார் பாதிரியார்

தேவாலயத்தில் புகுந்தது முதலை

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள லே ஹைக் ஏக்கர்ஸ் பகுதியில் அமைந்துள்ளது விக்டர் தேவாலயம். இதில், டேனியல் கிரிகோரி என்பவர் பாதிரியாராக உள்ளார். இந்த தேவாலயத்தில் கடந்த 29 ஆம் தேதி வழக்கம்போல் பிரார்த்தனை நடைபெற்றபோது அலிகேட்டர் இன முதலை ஒன்று வந்துள்ளது.

தேவாலயத்தில் பல்வேறு பகுதிகளில் சுற்றித் திரிந்த முதலையைப் பார்த்த டேனியல் கிரிகோரி, அதன் அருகில் சென்று செல்ஃபி எடுத்துள்ளார். மேலும், “தேவாலய வளாகத்தில் உலாவிய முதலை, தேவாலயத்துக்குள் வந்து பிரார்த்தனை செய்ய விரும்பவில்லை” எனவும் கூறினார்.

அவர் பதிவிட்ட இந்த வீடியோ இணையத்தில் பெரும் கவனத்தை ஈர்த்தது. பலரும் பாதிரியார் டேனியல் கிரிகோரிக்கு கண்டனம் தெரிவித்தனர். பின்னர் தொலைக்காட்சி ஒன்றுக்கு, நடந்த நிகழ்வைப் பற்றி விளக்கம் அளித்த டேனியல் கிரிகோரி, தான் செய்தது போன்று மற்றவர்கள் யாரும் செய்ய வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

அமெரிக்காவின் வனத்துறை அதிகாரிகளும் பாதிரியார் டேனியலுக்கு கண்டனம் தெரிவித்தனர். வன விலங்குகள், அதுவும் நொடிப்பொழுதில் தாக்கக்கூடிய விலங்குகளிடம் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும் எனக் கூறியுள்ள வனத்துறை அதிகாரிகள், பாதிரியார் டேனியல் செய்ததுபோல் அருகாமையில் சென்று புகைப்படம் எடுத்தல், வீடியோ பதிவு செய்தல் ஆகியவற்றை யாரும் செய்யக்கூடாது என அறிவுறுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here