கொரோனாவில் இருந்து மீண்டவர்களா? கவனம் என்கிறது மருத்துவம்

 பக்கவாதம், மாரடைப்பு ஏற்படுமாம்!

கொரோனா நுரையீரலை தாக்கி நிமோனியா தொற்றை ஏற்படுத்தும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் நாம் அறிய வேண்டிய முக்கியமான மற்றொரு விஷயம் கோவிட் நோய் ரத்த நாளங்களில் பாதிப்பு ஏற்படாமலே ரத்தம் உறைதலை தூண்டுகிறது.

இதனால் முக்கிய உறுப்புகளில் ரத்தம் உறைந்து பக்கவாதம், மாரடைப்பு போன்ற கடுமையான பாதிப்புகளை உண்டாக்கும். முதலில் கொரோனா தொற்று ஏற்பட்டு டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு செல்பவர்கள் சில நாட்களிலே மீண்டும் பாதிப்புடன் வருகிறார்கள்.

ஆனால் இப்படி வரும்பொழுது மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்பட்டுள்ளது காணமுடிகிறது. அதனால் கொரோனா தொற்றுக்கு மருத்துவர்கள் குறைந்தது மூன்று வாரங்களுக்கு ரத்தம் உறையாமல் இருப்பதற்கான மருந்துகளை பரிந்துரைப்பார்கள். அவற்றை சரியான முறையில் எடுத்துக்கொண்டால் இந்த கடுமையான பாதிப்புகள் வராமல் தடுக்கலாம்.

கொரோனாவும் இதயமும்

கொரோனா தொற்று இதயத்தை கடுமையான பாதிக்கப்படுகிறது. வைரஸ் இதயத்தின் தசை செல்களை நேரடியாக பாதிப்பதால் அவற்றின் சுருங்கி விரியும் தன்மை இழந்து, இதயம் பலவீனமடைகியது. வென்ட்ரி குலர் டாக்ரிக்கார்டியா பைப் ரிலேஷன் மாரடைப்பு மிக முக்கியமான பாதிப்பு. இதயத்துக்கு செல்லும் ரத்த நாளங்களில் ரத்தம் உறைவதால் ஏற்படுகிறது.

இது மருத்துவமனையில் கொரோனா சிகிச்சையில் இருக்கும்பொழுது 50 சதவீத நோயாளிகளுக்கு ஏற்படுகிறது.

அறிகுறிகள்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நான்கில் ஒரு பங்கு நோயாளிகளுக்கு இதய நோய் வருவதாக ஆராய்ச்சி மூலம் கண்டறியப்பட்டு உள்ளது. அவற்றில் 40 சதவீத நோயாளிகள் உயிர் இழக்கின்றனர்.

கொரோனா பாதிப்பால் இதய தசை வீக்கம், இதய தசை இறப்பு, இதயத்தில் காணப்படும் வேதிச்சுட்டிகள், இதய செயல் இழப்பு, ரத்த குழாய் அடைப்பு , மாரடைப்பு போன்ற நோய்கள் ஏற்படுகிறது.

இதற்கான அறிகுறிகள் மார்பு வலி, தலை சுற்றல், படபடப்பு, புதிதாக வரும் மூச்சுத் திணறல், சோர்வு ஆகும். இவைகளில் ஏதேனும் அறிகுறிகள் கொரோனா நோயாளிகளுக்கு தென்பட்டால் பெரும்பாலும் அவர்களுக்கு இதய நோய் பாதிப்பு இருக்க வாய்ப்பு உள்ளது.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்படும் நோயாளிகள் அதிகமாக புரதசத்து உணவுகளும், நீர்ச்சத்து உணவுகளும் சாப்பிடுவதால், ரத்த ஓட்டம் சீராக செயல்பட வைக்கும். சத்தான பழ வகைகளையும் சாப்பிட்டு, உரிய சிகிச்சை பெற்று, உடல் வலிமை பெற்று இதய நோயில் இருந்து விடுபடலாம்.

தடுப்பது எப்படி?

ரத்தம் உறையும் தன்மை அறிந்துக்கொள்ள சில பரிசோதனைகள் செய்து அதற்கேற்ப மருத்துவர்கள், மருந்துகள், பரிந்துரைப்பார்கள். அதனை சரியாக எடுத்துக்கொள்ள வேண்டும். கொரோனா தொற்று ஏற்பட்டு டிஸ்சார்ஜ் ஆனாலும் கடுமையான வேலைகள் உடற்பயிற்சிகள் செய்யாமல் இருப்பது நல்லது.

நோயின்றி நூறாண்டு காலம் வாழ்வது உங்கள் கைகளில் தான் உள்ளது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here