உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

மக்களே உஷார்!  தடுப்பூசி போடுவதில் கவனம்!

உலகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனாவை ஒழிக்க தடுப்பூசி மட்டுமே ஒரே ஆயுதம் என்பதால் உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசி போடும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டால் பரிசுகளும் வழங்கப்படுகின்றன. ஒரு சில நாடுகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு தடுப்பூசி போடுவது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி அனைத்து நாடுகளிலும் பல வகையான கொரோனா தடுப்பூசிகள் போடப்படுகின்றன. இந்நிலையில் கொரோனாவை ஒழிக்க இரு வெவ்வேறு நிறுவனத்தின் ஊசிகளைப் போட்டு கொள்ளலாம் என்று பரிந்துரை செய்வது ஆபத்தை ஏற்படுத்தக் கூடும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். 

இன்னும் இது குறித்த ஒரு முடிவுக்கு உலக சுகாதார நிறுவனம் வரவில்லை என்றும்  அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here