எச்சரிக்கை விடுத்த இந்திய மருத்துவ சங்கம்!
ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டாலும், மக்கள் வெளியில் செல்லும்போது தனிமனித இடைவெளி, முகக்கவசம் ஆகியவற்றை பின்பற்ற வேண்டும் என மத்திய அரசும், மாநில அரசுகளும் வலியுறுத்தி வருகின்றன.
ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டாலும், மக்கள் வெளியில் செல்லும்போது தனிமனித இடைவெளி, முகக்கவசம் ஆகியவற்றை பின்பற்ற வேண்டும் என மத்திய அரசும், மாநில அரசுகளும் வலியுறுத்தி வருகின்றன.
சமீபத்தில் இமாச்சல பிரதேச மாநில சுற்றுலாத் தளமான மணாலி, முக்கிய நகரங்களில் உள்ள மார்க்கெட் பகுதிகளில் மக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றாமலும், முகக்கவசம் அணியாமல் கொரோனா பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வே இல்லாமல் கூட்டமாக கூடியிருந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் சுற்றுலா தளங்கள், யாத்திரைகள் ஆகியவற்றுக்கு அனுமதி அளிக்க வேண்டாம் எனவும் இந்திய மருத்துவ சங்கம் வலியுறுத்தியுள்ளது.