எவரெஸ்ட் மலைச்சிகரம் பற்றி என்ன தெரியும்?

ஆங்கிலேயர் பெயர்தானே  எவரெஸ்ட்!

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் 1810 – 1821 காலகட்டத்தில் சர்வேயர் ஜெனரலாக இருந்த ஆண்ட்ரூ வாக் என்பவர் எவரெஸ்ட் மலைச்சிகரத்துக்கு இப்பெயரை வைத்தார்.

தனக்கு முன்பு சர்வேயர் ஜெனரலாக பதவி வகித்த சர் ஜார்ஜ் எவரெஸ்ட் இச்சிகரத்தை கண்டுபிடித்ததால், அவரது பெயரை இச்சிகரத்துக்கு வைத்துள்ளார்.

எவரெஸ்ட் மலைச்சிகரத்தின் தற்போதைய உயரம் 8,848.86 மீட்டர்கள். அது இன்னும் வளர்ந்துகொண்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.

எவரெஸ்ட் மலைச்சிகரம், ஒவ்வொரு நூற்றாண்டிலும் 40 சென்டிமீட்டர்கள் வரைவளர்வதாக கணக்கிடப்பட்டுள்ளது.

ஆக்சிஜன் இல்லாத காரணத்தால், எவரெஸ்ட் மலைச்சிகரத்தில் எந்த உயிரினமும் வாழ்வதில்லை.

எவரெஸ்ட் மலைச்சிகரம் 60 மில்லியன் ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என்று புவியியலாளர்களின் தெரிவிக்கின்றனர்.

இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் எவரெஸ்ட் மலைச்சிகரத்தின் உச்சியை அடைந்திருக்கிறார்கள்.

எவரெஸ்ட் மலைச்சிகரத்தின் உச்சத்தை அடைவதற்கான முயற்சியில் 300 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேபாளத்தை சேர்ந்த காமி ரிடா ஷெர்பா என்பவர் அதிகபட்சமாக இதுவரை 24 முறை எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறியுள்ளார்.

ஒருவர் மலைச்சிகரத்தில் ஏற குறைந்தபட்சம் 30 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் செலவாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here