ஆபத்தான வீரியமிக்க   கொரோனா வகைகள் தொன்றலாம்!

 –உலக சுகாதார மையம் எச்சரிக்கை!

நியூயார்க்:

கொரோனா வைரஸ் கேஸ்கள் உலகம் முழுக்க பல நாடுகளில் அதிகரித்து வருவதால், புதிய மோசமான உருமாறிய கொரோனா வகைகள் தோன்ற வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்னும் எதுவும் முடியவில்லை என்று உலக சுகாதார மையம் தனது எச்சரிக்கையில் தெரிவித்துள்ளது.

உலகம் முழுக்க பல நாடுகளில் கொரோனா கேஸ்கள் மீண்டும் உயர தொடங்கி உள்ளது. இங்கிலாந்து, இந்தோனேசியா, பிரேசில், ரஷ்யா ஆகிய நாடுகளில் புதிய அலை ஏற்பட்டுள்ளது. முக்கியமாக டெல்டா வகை கொரோனா காரணமாக அதிக கேஸ்கள் ஏற்பட்டு வருகின்றன.

 

சர்வதேச அளவில் தினசரி கேஸ்கள் கொஞ்சம் குறைந்த நிலையில் தற்போது மீண்டும் தினமும் 540,000+ கேஸ்கள் பதிவாகி வருகிறது.

உலக சுகாதார மையம்
இந்த நிலையில் உலகம் முழுக்க கேஸ்கள் அதிகரிப்பது குறித்து உலக சுகாதார மையம் செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கொரோனா பரவல் இன்னும் முடியவில்லை. இந்த பெருந்தொற்று இன்னும் முடிவிற்கு வரவில்லை. மீண்டும் உலகம் முழுக்க கொரோனா கேஸ்கள் அதிகரிக்க நிறைய வாய்ப்புகள் உள்ளன.

வாய்ப்பு

அதோடு மிக மோசமான, உருமாறிய கொரோனா கேஸ்கள் இதனால் தோன்றும் வாய்ப்புகளும் உள்ளன. இப்போது இருப்பதை விட மோசமான, அதிக கவலைதரக்கூடிய, கொரோனா வகைகள் தோன்றும் வாய்ப்புகள் உள்ளன. இந்த உருமாறிய புதிய வகைகள் நம்மால் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கூட போகும் வாய்ப்புகள் உள்ளன.

சவால்

அதிக சவாலான கொரோனா வகைகள் தோன்றும் வாய்ப்புகள் உள்ளன. ஆஸ்திரேலியா உள்ளிட்ட கொரோனாவை கட்டுப்படுத்திய நாடுகளில் கூட மீண்டும் கேஸ்கள் வேகமாக உயர தொடங்கி உள்ளது. தீவிரமான லாக்டவுனுக்கு பின்பும் அங்கு கேஸ்கள் வேகமாக உயர்ந்து வருகிறது. ஆசிய, ஆப்ரிக்க நாடுகளில் கேஸ்கள் வேகமாக உயர்ந்து வருகிறது.

கேஸ்கள் உயர்கிறது

ஒரே வாரத்தில் ஆப்ரிக்காவில் 43% புதிய கேஸ்கள் உயர்ந்துள்ளது. உலகம் முழுக்க நடுக்கும் விளையாட்டுப் போட்டிகள், மக்கள் வெளியே செல்வது, நிகழ்ச்சிகள், தேர்தல்கள், மத நிகழ்ச்சிகள் ஆகியவை கொரோனா பரவலை அதிகரிக்கின்றன.

பல நாடுகள்

பல நாடுகளில் தளர்வுகள் கொண்டு வந்துள்ளனர். இதுவும் கேஸ்களை உயர்த்தி வருகிறது. இது கண்டிப்பாக புதிய வகை கொரோனாவை உருவாக்கும் அச்சம் உள்ளது என்று, உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here