அரசுக்கு எதிராக இந்திரா காந்தி தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறு போலீஸ் வழங்கிய மனுவை நிராகரித்தது உயர் நீதிமன்றம்.

கோலாலம்பூர், ஜூலை 16:

தனது மகளை குழந்தையாக இருந்தபோது, தனது கணவர் அவரை  இஸ்லாம் மதத்திற்கு மாற்றியதாகவும் கடத்திச் சென்றதகவும் தாயார் இந்திராகாந்தி செய்த மேல்முறையீட்டில், தனது கணவரான ரிடுவான் அப்துல்லாவை கைது செய்து அவரது மகளை மீட்டுத்தர தவறிய போலீஸ் மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக இந்திரா காந்தி தொடுத்த வழக்கு வரும் டிசம்பர் 15 ஆம் தேதி செவிமடுக்கப்படும் என்று உயர்நீதிமன்றம் கூறியது.

ஆனால் அரசுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்யுமாறு போலீஸ் மற்றும் அரசு தரப்பு வழங்கிய மனுவை இன்று காலை (ஜூலை 16) உயர்நீதிமன்றம் நிராகரித்தது என்று இந்திரா காந்தியின் வழக்கறிஞரான ராஜேஷ் நாகராஜன் உறுதிப்படுத்தினார்.

இந்திரா காந்தி தனது மகளை மீட்டுத்தருவதில் அரசு தரப்பு பாரபட்சமாக  செயல்பட்டதாக கூறி கடந்தாண்டு அக்டோபர் 28 ஆம் தேதி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here