பரபரப்பு வாக்குவாதம்

லிவர்புல் அணி நிர்வாகி ஜோகர்ன் குளோப்- ஆட்டக்காரர் முகமட் சாலா இடையே நிகழ்ந்த வாக்குவாதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சனிக்கிழமை நடைபெற்ற வெஸ்த் ஹாம் அணியுடனான ஆட்டத்தில் லிவர்புல் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலை கண்டது. இந்த ஆட்டத்தில் முகமட் சாலா மாற்று ஆட்டக்காரராக அமர்த்தப்பட்டார்.

ஆட்டத்தில் லிவர்புல் 2-1 என்ற கோல் கணக்கில் பின்தங்கியிருந்தபோது களம் இறக்கப்பட்ட நிலையில், முகமட் சாலா கோபத்துடன் காணப்பட்டார். அப்போது அவருக்கும் ஜோகர்ன் குளோப்பிற்கும் வாக்குவாதம் எழுந்தது.

இதனையடுத்து லிவர்புல் அணியின் மற்றோர் ஆட்டக்காரர் நூனேஸ் முன்வந்து சாலாவை சமாதானப்படுத்தினார். இது அரங்கில் கூடியிருந்த ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

 இந்நிலையில் தாம் இந்த விஷயத்தை பெரிதுப்படுத்தவில்லை என ஜோகர்ன் குளோப் குறிப்பிட்டுள்ளார். உடைமாற்று அறையிலேயே இந்த விவகாரத்தை பேசி முடித்து விட்டோம். எனவே மீண்டும் அதை பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை என அவர் கூறியிள்ளார்.

ஜோகர்ன் குளோப் இந்த தவணை இறுதியோடு லிவர்புல் அணியிலிருந்து வெளியேறுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here