ஈகுவாடார் நாட்டில் சிறைக் கைதிகள் இடையே கடும் மோதல்

காவல் அதிகாரிகள் காயம் 18 பேர் உயிரிழப்பு. 

ஈகுவடார் நாட்டில் சிறை கைதிகள் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருவது வாடிக்கையாகி வருகிறது. இதனால் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சிறை கைதிகள் கொலை செய்யப்படும் நிகழ்வுகளும் அதிகரிக்கிறது.

சிறையில் பாதுகாப்பை பலப்படுத்தினாலும் வன்முறைச் சம்பவங்கள் தலைவிரித்து ஆடுகிறது.

சிறைகளில் அடுத்தடுத்து கைதிகள் இடையே ஏற்பட்ட மோதலில் 18 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வகையில் நேற்று ஒரே நாளில் அந்நாட்டின் 2 சிறைகளில் கைதிகளுக்குள் ஏற்பட்ட மோதலில் 18 பேர் கொல்லப்பட்டனர். 

குவாயாகு, லட்டாகியூங்கா சிறைகளில் நேற்று கைதிகளுக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இதில் 18 கைதிகள் உயிரிழந்தனர். அதனை தடுக்க முயன்ற 9 போலீஸ் அதிகாரிகள் , 35 கைதிகள் காயம் அடைந்தனர்.

இதனை தொடர்ந்து, போலீஸ் படையினர் அதிரடி நடவடிக்கை எடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த வன்முறையை பயன்படுத்தி லட்டாகியூங்கா சிறையில் இருந்து தப்பிக்க முயற்சித்த 45 கைதிகளை போலீசார் பிடித்து கைது செய்தனர்.

கடந்த பிப்ரவரியில் நடந்த மோதல் சம்பவத்தில் 3 சிறைகளைச் சேர்ந்த 79 கைதிகள் கொல்லப்பட்டனர் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here