கொய்னா’ சூறாவளி; பிலிப்பைன்சில் திடீர் வெள்ளம்

மணிலா:

பிலிப்பைன்சில் வீசிவரும் ‘கொய்னா’ புயல், திங்கட்கிழமை காலை சூறாவளியாக உருவெடுத்தது.

இதனால் அங்கு கனமழை பெய்து வருகிறது. திடீர் வெள்ளமும் நிலச்சரிவும் ஏற்படும் அபாயமுள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு நிலையமான ‘பகாசா’ எச்சரித்துள்ளது.

இந்தச் சூறாவளி பிலிப்பைன்சின் ககாயன் மாநிலத்தின் வடபகுதியான அபாரிக்கு கிழக்கே 675 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது.

இதனால், அங்கு மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் காற்றும் 150 கி.மீ. வரையிலான வேகத்தில் சூறைக்காற்றும் வீசுகிறது என ‘பகாசா’ தெரிவித்துள்ளது.

வடமேற்குத் திசை நோக்கி மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் சூறாவளி நகர்கிறது என்றும் அந்நிலையம் குறிப்பிட்டது.

இந்தச் சூறாவளியால் அங்கு தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கியுள்ளது.

இதனிடையே, லுசோன் தீவில் மழையும் சில இடங்களில் இடியுடன் கூடிய மழையும் பெய்துவருகிறது.

‘கொய்னா’ சூறாவளி வரும் வியாழக்கிழமை பிலிப்பைன்சில் கரையைக் கடக்கும் என முன்னுரைக்கப்படுவதால் தைவானின் தெற்குப் பகுதியில் நிலச்சரிவு ஏற்படும் அபாயமுள்ளதாக ‘பகாசா’ தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here