தற்காப்புக்காக மக்கள் பெப்பர் ஸ்ப்ரே சட்ட திருத்தம் செய்க!

அல்பர்ட்டா அரசாங்கம் கோரிக்கை...

கனடா:

தற்காப்பு கருதி மக்களை பெப்பர் ஸ்ப்ரே எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் என அல்பர்ட்டா அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

பெடரல் அரசாங்கத்திற்கு எழுதிய கடிதத்தில், அல்பர்ட்டாவின் நீதித்துறை அமைச்சர் Kaycee Madu குறித்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

மாநிலத்தில் வெறுப்பு தொடர்பான வன்முறைகள் அதிகரித்து வருகிறது, இதனால் பாதுகாப்பு கருதி pepper spray எடுத்துச் செல்ல அனுமதித்தால் தீர்வு கிடைக்கும் என குறிப்பிட்டுள்ளார். பொதுமக்கள் இதுபோன்ற வன்முறையில் இருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள எந்த ஆயுதத்தையும் எடுத்துச் செல்லலாம்.

கடந்த எட்டு மாதங்களில், ஆல்பர்ட்டா முழுவதும் ஏராளமான தாக்குதல்கள் நடந்துள்ளன, அவற்றில் பல இஸ்லாமிய எதிர்ப்பு அல்லது கறுப்பின எதிர்ப்பு உணர்வில் வேரூன்றியதாக போலிசார் கூறுகின்றனர்.

பெரும்பாலும் பெண்களே தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளனர். பொதுவாக pepper spray எடுத்துச் செல்வதும், தற்காப்புக்கு என்ற போதும் பயன்படுத்தப்படுவது குற்றச்செயலாகும். ஆனால் இதில் திருத்தம் வேண்டும் என்றே அல்பர்ட்டாவின் நீதித்துறை அமைச்சர் Kaycee Madu கேட்டுக்கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here