போலீஸ்காரர்களின் கையை கடித்து அவர்களை குத்தியதாக குடிபோதையில் இருந்த 4 ஆடவர்கள் கைது!

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 24:

குடிபோதையில் இருந்ததாக நம்பப்படும் ஐந்து இளைஞர்கள் அடங்கிய குழு ஒன்று, பொதுமக்களுக்கு தொல்லை கொடுப்பதாக வந்த புகார்களைத் தொடர்ந்து, அவர்களைக் கைது செய்ய முயன்ற இரண்டு போலீஸ்காரர்களை குத்தியும் அவர்களது தோள்பட்டையையும் கடித்தனர்.

அம்பாங் ஜெயா மாவட்ட காவல்துறை தலைவர் துணைக்கமிஷனர் முகமட் ஃபாரூக் ஈஷாக் இது தொடர்பில் கருத்துரைத்த போது, கடந்த புதன்கிழமை (ஜூலை 21)இரவு அம்பாங்கில் உள்ள ஸ்ரீ நிலம் அடுக்குமாடிக்குடியிருப்பில் இருந்து கிடைத்த ஓர் புகார் குறித்து விசாரிக்க அறிவுறுத்தப்பட்டபோது, கோவிட் -19 எஸ்ஓபி மீறுபவர்கள் மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கைக்காக சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த இரு போலீஸ்காரர்களை குறித்த இடத்திற்கு அனுப்பியதாக கூறினார்.

“அவர்கள் அங்கு சென்ற போது, ​​ஐந்து ஆண்கள் குடிபோதையில் நடந்து கொள்வதைக் கண்டார்கள்.

“போலீஸ் அவர்களது அடையாளங்களை சரிபார்க்க முயன்றனர், ஆனால் அக்குழு போலீஸ் கடமைகளைச் செய்வதிலிருந்து தடுத்தது. மேலும் அவர்கள் போலீஸ்காரர்களுக்கு எதிராக தவறான மொழியைப் பயன்படுத்தினர்.

அதனைத்தொடர்ந்து கூடுதலான போலீசார் அவ்விடத்துக்கு அனுப்பப்பட்டனர். மேலும் இக்குழுவினர் போலீஸ்காரர்களை நெஞ்சில் குத்தியும் கையைக் கடித்தும் வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் அக்குழுவில் நான்கு பேரை கைது செய்தோம். அவர்களில் ஒருவர் தப்பியோடியுள்ளார் “ என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் அம்பாங் போலீஸ் தலைமையகத்தில் இரு ஆடவர்கள் போலீஸுடன் தகாத வார்த்தைகள் பேசியதுடன் ஆக்ரோசமாகவும் நடந்து கொண்டனர். அத்தோடு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 23 முதல் 25 வயதுடையவர்கள் என்றும் அவர்களுக்கு போதைப்பொருள் மற்றும் வன்முறையுடன் தொடர்புடைய குற்றப் பதிவுகள் ஏற்கனவே இருப்பதாகவும் ஃபாரூக் கூறினார்.

தப்பித்து ஓடிய ஆடவரை தாம் அடையாளம் கண்டுள்ளதாகவும் அவரை தேடி வருவதாகவும் அவர் கூறினார்.

மேலும் வன்முறை மற்றும் அச்சுறுத்தல்களைப் பயன்படுத்தி அரசு ஊழியர்கள் தங்கள் கடமைகளைச் செய்வதைத் தடுப்பதற்காக தண்டனைச் சட்டத்தின் பிரிவு 186 மற்றும் 353 ன் கீழ் சந்தேக நபர்கள் விசாரிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

“மேலும் போலீஸ் நிலையத்தில் தவறாக நடந்து கொண்டதற்காக போலீஸ் சட்டத்தின் 90 வது பிரிவின் கீழும், சட்டப்பூர்வ கைது நடவடிக்கையில் இருந்து தப்பித்ததற்காக தண்டனைச் சட்டத்தின் 224 வது பிரிவின் கீழும் நாங்கள் அவர்களை விசாரித்து வருகிறோம் என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here