திரெங்கானு ஆற்றில் கோவிட்-19 தொற்று தனிமைப்படுத்தலுக்குரிய பட்டியுடன் (வளையலுடன்) ஓர் ஆடவரின் சடலம் கண்டுபிடிப்பு

கோலா திரெங்கானு, ஜூலை 26:

வெள்ளைநிற தனிமைப்படுத்தப்பட்ட பட்டி (வளையல்) அணிந்திருந்த ஒருவரின் சடலம் கம்போங் பாங்கோல் செம்படக் அருகே திரெங்கானு ஆற்றில் மிதந்து கிடக்க கண்டுபிடிக்கப்பட்டது.

இன்று பிற்பகல் 2.37 மணியளவில் காவல்துறையினரிடமிருந்து அழைப்பு வந்ததை அடுத்து டைவ் பிரிவின் (dive unit) 6 உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத் தலைவர் ரோஸிசா அப்னி ஹஜார் தெரிவித்தார்.

“ஆற்றின் கரையில் இருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் மிதக்கும் ஒரு ஆடவரின் சடலத்தை அவர்கள் கண்டார்கள் என்றும் அந்தச்சடலம் வீங்கியிருந்தது, என்றும் இரண்டு நாட்கள் தண்ணீரில் இருந்திருக்கலாம் என நம்பப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

“சடலத்தின் கையில் வெள்ளை நிறப்பட்டி (வளையல்) இருந்ததால், மீட்புக்குழுவிற்கு அவர்களின் வேலையைச் செய்வது ஆபத்தானது என்பதனால் அக்குழு தொடக்கத்திலிருந்து செயல்பாட்டின் இறுதி வரை தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை (PPV) அணிந்திருந்தது, ”என்று இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here