உலகளவில் 11 ஆவது பிரபலம்!

தெறிக்க விடுகிறார்  மோடி!

உலகளவில் அதிகமானவர்கள் பின் தொடரும் ட்விட்டர் கணக்குகளைக் கொண்டவர்களின் பட்டியலில் பிரதமர் மோடி 11 ஆவது இடத்தில் உள்ளார்.

இதுவரை இந்திய பிரதமர் மோடியை ட்விட்டரில் 7 கோடிக்கும் அதிகமானவர்கள் பின்தொடர்கிறார்கள். இதன் மூலமாக ட்விட்டரில் மோடி தெறிக்கவிட்டுக் கொண்டிருக்கிறார்.

சமூக வலைதளங்களில் பிரதமர் மோடி எப்போதுமே அதிகளவில் துடிப்புடன் செயல்பட்டு வருகிறார். அதனால் அவரை பின்தொடர்பவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். அவரது கருத்துகளை, மக்களுக்கான தகவல்களை அவர் சமூக ஊடகங்கள் மூலம் தெரிவித்து வருகிறார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் பிரதமர் மோடி ட்விட்டரை பயன்படுத்தி வருகிறார். அப்போது அவர் குஜராத் முதலமைச்சர். 2010 இல் அவரை பிந்தொடர்பவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சமானது. 2011 ஆம் ஆண்டு 4 லட்சமாக உயர்ந்தது.
தற்போது அந்த  எண்ணிக்கை 7 கோடியை கடந்துள்ளது.

உலகளவில் ட்விட்டர் பின்தொடர்கின்றவர்களின் எண்ணிக்கையில்  முதலிடத்தில் அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா இருக்கிறார்.

அவருடைய எண்ணிக்கை சுமார் 13 கோடி. அவரைத் தொடர்ந்து ஜஸ்டின் பீபர், ரிஹானா, கிறிஸ்டியானோ ரொனால்டோ, லேடி காகா உள்ளிட்டோர் முதல் பத்து இடங்களில் உள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here