பட்டர்வொர்த், ஜூலை 29:
செபராங் ஜெயா மருத்துவமனை புதன்கிழமை (ஜூலை 28) முதல் கோவிட் -19 தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து, அறிவிப்பு வரும் வரை பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஒரு அறிக்கையின் மூலம், அவசர சிகிச்சை தேவைப்படுபவர்கள், மருத்துவ அதிகாரிகளால் அழைக்கப்பட்டவர்கள் மற்றும் குழந்தை பெற்றுக்கொள்ளும் தாய்மார்கள் தவிர மற்றைய அனைத்து வருகையாளர்களும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று மருத்துவமனை தெரிவித்துள்ளது.










