பன்றிகள் கடந்து செல்வதைத் தவிர்க்க முற்பட்ட ரயில்வே ஊழியர் (KTMB) விபத்தில் பலி

கோலாலம்பூர், ஜூலை 29:

        நேற்று கிளந்தானின் கோத்தா பாருவில் பன்றிகள் கடந்து செல்வதைத் தவிர்க்க முயன்றபோது, ​​ஆடவர் ஓட்டி வந்த கார் கட்டுப்பாட்டை மீறியதால் துணை மின்சார பெட்டி மீது மோதியதில் ரயில்வே ஊழியர் (KTMB) பலியானார்.

பலியான டோசியன் ஹருன் (53) ராஜா பெரெம்புவான் ஜைனாப் II மருத்துவமனையில் (HRPZ II) சிகிச்சை பலனின்றி இறந்தார்.

கோத்தா பாரு மாவட்ட காவல்துறைத் தலைவர் அப்துல் ரஹீம் தாஹூட் கூறுகையில், “பாதிக்கப்பட்டவரும் அவரது 21 வயது மகனும் கோத்தா பாருவில் இருந்து தானா மேராவுக்கு திரும்பிச் சென்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது” என்று  கூறினார்.

“திடீரென காரின் முன்னால் வந்த பன்றிகளை பார்த்ததும், காரை ஓட்டி வந்த பாதிக்கப்பட்ட நபர் திணறியதாகவும் என்ன செய்வது என்று தெரியாது திக்கு முக்காடினார் என்றும் அதனால் அவர் ஓட்டி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்தது” என்று அவர் கூறினார்.

“தூரம் மிக அருகில் இருந்ததால், பாதிக்கப்பட்டவருக்கு தனது வாகனத்தை கட்டுப்படுத்த முடியவில்லை கட்டுப்பாட்டை இழந்த கார் துணை மின்சார பெட்டி மீது மோதியது. விபத்தின் விளைவாக அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது” என்றும் அவர் கூறினார்.

பாதிக்கப்பட்டவர் மேலதிக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் காலை 10 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் இறந்துவிட்டதாகவும் அவர் கூறினார்.

“இதற்கிடையில், காரிலிருந்த அவரது மகனுக்கு விபத்தின் விளைவாக லேசான காயம் ஏற்பட்டது என்றார்.

“சாலை போக்குவரத்து சட்டம் 1987 இன் பிரிவு 41 (1) இன் படி இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது’ என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here