கோத்தா பாரு, ஆகஸ்டு 1:
இஸ்தானா பாலை பெசாரை தற்காலிக தடுப்பூசி மையமாக பயன்படுத்த கிளந்தான் சுல்தான் முஹமட் V சம்மதம் அளித்துள்ளார்.
ராயல் ஹவுஸ்ஹோல்ட் கட்டுப்பாட்டாளர் டத்தோ தெங்கு ஆஸ்மி தெங்கு ஜாபர் கூறுகையில் இஸ்தானா பாலை பெசார் தான் கிளந்தானில் உள்ள ஒரே ஒரு அரண்மனை என்றும் கூறினார்.
தேசிய மீட்புத் திட்டத்தின் (PPN) இரண்டாம் கட்டத்திற்காக மாநில சுகாதாரத் துறையுடன் இணைந்து கிளந்தான் சுல்தான் அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இஸ்தானா பாலை பெசாரில் தேசிய கோவிட் -19 நோய்த்தடுப்புத் திட்டம் இன்று (ஆகஸ்டு 1) தொடங்கி ஐந்து நாட்களுக்குத் தொடரும் என்று அவர் கூறினார்.
“இத்திட்டத்திற்காக, சுமார் 2,000 பேர் தடுப்பூசியைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 1,000 உள்ளூர்வாசிகள், மீதமுள்ளவர்கள் கிளந்தான் அரண்மனையின் ஊழியர்கள் மற்றும் உறவினர்கள்” என்றுகூறினார்.
மேலும் சுல்தான் முஹமட் V அனைத்து முன்னணி வீரர்களுக்கும், குறிப்பாக கோவிட் -19 பரவுவதை கட்டுப்படுத்தும் சுகாதார அமைச்சின் ஊழியர்களுக்கும் தனது பாராட்டுக்களை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-பெர்னாமா