ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக குரல் கொடுத்தார் ராவன் சாண்டெர்ஸ்
அமெரிக்க நாட்டைச் சார்ந்த குண்டு எறிதல் வீராங்கனை ராவன் சாண்டர்ஸ் ஒலிம்பிக் போட்டியின் பதக்க மேடையில் கையை ஆங்கில எழுத்து எக்ஸ்[x] வடிவில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்.
நடந்து வரும் ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற அவர் நேற்றைய தினம் பதக்கத்தைப் பெற்ற அதே மேடையிலேயே இவ்வாறு போராடியுள்ளார்.
இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ள அமெரிக்கா ஊடகங்கள், “ராவன் சாண்டர்ஸ் கறுப்பினத்தை சார்ந்தவர், மாற்று பாலினத்தவர்களின் உரிமையை நேரடியாக ஆதரிப்பவர். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக அவர் இவ்வாறு செய்துள்ளார்” என்று கூறியுள்ளது.
மேலும், இதுகுறித்து தெரிவித்துள்ள ராவன் சாண்டர்ஸ்,”உலகெங்கிலும் போராடி வருகிற, தங்கள் குரல் ஒலிக்க இடமற்ற மக்களின் சார்பாக நான் பிரதிநிதித்துவப்படுத்த விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், ராவன் சாண்டர்ஸ் ஒலிம்பிக் பதக்க மேடையில் போராடக்கூடாது என்ற ஒலிம்பிக் சம்மேளனஒலிம்பிக்த்தின் விதியை மீறியுள்ளார்.
ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்வதற்கு முன்னர் மட்டுமே அமைதியான வழியில் போராட வீரர்களுக்கு ஒலிம்பிக் சம்மேளன அனுமதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “அவர்கள் இந்த பதக்கத்தை முயற்சி செய்து எடுத்துக்கொள்ளட்டும். என்னால் நீந்த முடியாவிட்டாலும் எல்லைகளைத் தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளர்
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.