பினாங்கு நாட்டுக்கோட்டை நகரத்தார் அறங்காவலர்கள் ஏற்பாட்டில் பினாங்கு மருத்துவமனயின் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மருத்துவ உபகரணங்களை வழங்கியது

அண்மைய காலகட்டத்தில் பினாங்கில் கோவிட் தொற்று நோய் அதிகரித்து வரும் நிலையில், பினாங்கு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில், படுக்கைகளும் உபகரணங்களும் அதிகம் தேவைப்படுகின்றது.

இதை கருத்தில்கொண்டு, பினாங்கு நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் கோவில் அறங்காவலர்கள், ஈ சி ஜி இயந்திரம் (ECG machine) மற்றும் நோயாளியின் மானிட்டர் (patient monitor ), சுமார் RM 20,000 பெருமான கருவிகளை, அன்பளிப்பாக வழங்கி உள்ளனர்.

நடப்பு கோவிலின் அறங்காவலர் திரு. Dr. A. நாராயணன் செட்டியார், இந்த சிரமமான கால கட்டத்தில், நமது மாநில மருத்துவமனைக்கு தங்களின் உதவிக்கரங்களை வழங்கும் வாய்ப்பு கிடைத்ததிற்கு தாங்கள் பெருமிதம் அடைவதாகக் கூறினார்.

மேலும், தங்கள் அறக்கட்டளையின் கீலுள்ள கோவில்கள் முறைப்படியான SOP ஐ துரிதமாக பின்பற்றி அரசாங்கத்திற்கு உதவிவருவதாகவும் கூறினார்.

Dato Dr. S. செல்லப்பன், இவவேலையில் குடிமக்களாகிய நாம் அனைவரும் வெகு விரைவில் கோவிட் தடுப்பூசியை போட்டுக்கொள்ளவேண்டிய அவசியத்தை வலியுரித்தியுள்ளார்.

இதன் மூலம் “மந்தை நோய் எதிர்ப்பு சக்தியை (Herd immunity) விரைவில் சாதிப்பதோடு கோவிட் நோயின் வீரியத்தை கட்டுக்குள் கொண்டுவர இயலும் என தெளிவுபடுத்தினர். பினாங்கு மருத்துவமனை சார்பாக Dr. S. ஷாமினி (உதவி இயக்குனர் ), அக மகிழ்வுடன் தேவையான அன்பளிப்புக்களை பெற்றுக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here