வுகான் ஆய்வகத் தகவல் கசிந்தது
அமெரிக்கா:
சீனாவின் வுகான் வைராலஜி ஆய்வகம் கட்டி முடிக்கப்பட்ட 2 வருடத்திற்குள் அபாயகரமான கழிவைப் பராமரிக்க சீன அரசிடம் நிதி கேட்டு கோரிக்கை வைத்த பரபரப்பு தகவலை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.
உலக நாடுகளை பெரும் இன்னலுக்கு உள்ளாகியுள்ள கொரோனா வைரஸால் பாதிப்பு, உயிரிழப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு அலையில் சிக்கி தவித்து வருகிறது. கொரோனாவால் 19.95 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்காவின் குடியரசு கட்சி வெளியுறவு குழு பிரதிநிதி மைக்கேல் கொரோனா குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டார். இந்த அறிக்கையில், ” சீனாவின் வுகான் சந்தையில் இருந்து கொரோனா பரவவில்லை. வுகான் வைரஸ் ஆய்வகத்தில் அது விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு கூடத்தில் மனிதரை தாக்கும் கொடிய வைரஸை உருவாக்கி, அதனை அறியாதபடி மறைக்கும் பணியும் நடந்துள்ளது. இதுதொடர்பான ஆதாரங்கள் அதிகளவு கிடைத்துள்ளது. கடந்த 2019 செப்டம்பர் 12 ஆம் தேதிக்கு முன்னதாகவே வுகான் ஆய்வகத்தில் இருந்து கொரோனா கசிந்துள்ளது.
வுகான் ஆய்வகத்தில் அபாயத்தன்மையுள்ள கழிவை பராமரிக்க மற்றும் சீரமைக்க நிதி கோரப்பட்டுள்ளது. வுகான் ஆய்வகம் செயல்பட தொடங்கிய 2 வருடத்திற்குள் இவர்களுக்கு ஆய்வகத்தின் அபாயகரமான கழிவுகளை கையாள வசதிகள் தேவைப்பட்டுள்ளது ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.