– பிரதமருக்கு கடிதம் எழுதிய நீதிபதி
புதுடெல்லி:
குழந்தைகளை அடிமையாக்கும் ஆன்லைன் விளையாட்டுகளின் எதிர்மறையான தாக்கங்களை சுட்டிக்காட்டி, கூடுதல் மாவட்ட நீதிபதி ஏடிஜே நரேஷ் குமார் லகா பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
இத்தகைய விளையாட்டுகள் “குழந்தைகள் மீது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அவர்களை இயந்திரங்களைப் போல ஆக்குகின்றன என நீதிபதி நரேஷ் குமார் லகா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
குழந்தைகளின் வளர்ச்சியில் பேரழிவு தரும் பாதகமான விளைவை ஏற்படுத்திய மோசமான விளையாட்டு PUBG மொபைலை தடை செய்த உங்கள் செயலை நாட்டின் குடிமக்கள் பாராட்டினர்.
ஆனால், சமீபத்தில் இதே போன்ற இரண்டு விளையாட்டுகள், அதாவது, Free Fire (Garena Free Fire – Rampage) , PUBG India (Battle Ground Mobile India) ஆகியவை முந்தைய PUBG போன்ற குழந்தைகளுக்கும் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
குழந்தைகள் இதுபோன்ற விளையாட்டுகளை விளையாடுவதில் நீண்ட நேரம் செலவிடுவதாகவும், இது அவர்களின் இயல்பு வாழ்க்கையை சீர்குலைத்து, அவர்களின் குடும்பம், சமூக நடத்தையை பாதிக்கிறது என்றும் லகா கூறினார்.
இத்தகைய வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்த ஒரு சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்று அவர் எழுதிய கடிதத்தில் பரிந்துரைத்துள்ளார்.