டிசம்பர் மாதத்துக்குள் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசி

 உற்பத்தியை அதிகரிக்க முடிவு

கொரோனா தடுப்பூசி மருந்துகளான கோவிஷீல்டு , கோவாக்சின் ஆகியவற்றின் உற்பத்தி டிசம்பர் மாதத்துக்குள் அதிகரிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று நாட்டின் தற்போதைய கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசி உற்பத்தி­ அளவு தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா எழுத்து மூலம் அளித்த பதிலளித்தார்.

கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டு உற்பத்தி ஒரு மாதத்தில் 1.1 கோடியில் இருந்து 1.2 கோடி டோஸ்களாகவும் கோவாக்சின் தடுப்பூசி உற்பத்தி ஒரு மாதத்துக்கு 2.5 கோடியில் இருந்து 5.8 கோடி டோஸ்களாகவும் வரும் டிசம்பர் மாதத்துக்குள் அதிகரிக்கப்படும். தடுப்பூசி உற்பத்தியாளர்கள் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளனர்.

மேலும் 4 மருந்துக் கம்பெனிகள் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசி உற்பத்தியை தொடங்க உள்ளன. இதன் மூலம் உள்நாட்டில் மக்களுக்கு தேவைப்படும் தடுப்பூசி தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கும்.

நாடு முழுவதும் இதுவரை 47 கோடி பேருக்குக் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தத் தேவையான எல்லா முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here