பிரித்தானியாவின் அடுத்த ராஜா, ராணியாகின்றனரா வில்லியம் கேட் தம்பதிகள்?

லண்டன்: பிரித்தானியாவில் மகாராணி எலிசபெத்திற்கு பின்னர், அரியணை ஏற தயாராவதற்காக இளவரசர் வில்லியம், கேட் (William and Catherine Middleton) தம்பதியினர் எடுத்துள்ள முக்கிய நடவடிக்கை குறித்து ராஜ குடும்ப நிபுணர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

மேலும் இளவரசர் வில்லியம், கேட் தம்பதியினர் சமீபகாலமாக வெளிநாட்டு சுற்றுலா பயணங்களை தவிர்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் ராஜ குடும்ப நிபுணரான Katie Nicholl இளவரசர் வில்லியம், கேட் தம்பதியினர் வருங்கால ராஜா, ராணியாக அரியணை ஏற தயாராவதற்காக வெளிநாட்டு சுற்றுலா பயணங்களை தவிர்த்து வருவதாக கூறியுள்ளார்.

மேலும் அவர்கள் இருவரும் பாரம்பரியமாக வருங்காலத்தில் மன்னர் மற்றும் ராணியாக அரியணை ஏற தயாராவதற்காக Amner Hall, Norfolk உள்ளிட்ட இடங்களில் மட்டுமே தங்குவார்கள் என்றும் கூறப்படுகிறது.

இதற்கிடையே தனது தாய் 95 வயதிலும் நல்லாட்சி புரிந்து வருவதால் இளவரசர் சார்லஸ் (Prince Charles)அடுத்த மன்னராவதற்காக காத்திருந்து அவரது கனவு கலைத்து போனதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இனி சார்லஸ் மன்னராக பதவி ஏற்றாலும் குறைந்த காலமே அரியணையில் அமர்வார் என்றும், எனவே வில்லியமும், கேட்டும் (William and Catherine Middleton) தற்போது அரியணை ஏற தயாராவதற்காக வெளிநாட்டு சுற்றுலா பயணங்களை தவிர்த்து பிள்ளைகளுடன் வீட்டில் நேரத்தை செலவழித்து வருகின்றதாகவும் பிரித்தானிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here