போர்ட் கிள்ளான் வட துறைமுகத்தில் பிளாஸ்டிக் மறுசுழற்சி தொழிற்சாலையில் தீ

போர்ட் கிள்ளான் வடக்கு துறைமுகத்தில் உள்ள பிளாஸ்டிக் மறுசுழற்சி தொழிற்சாலையில் ஏற்பட்ட  தீ காரணமாக  90% கட்டடம் தீயில் அழிந்தது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் இல்லை.

சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினரின் கூற்றுப்படி, அவர்கள் இரவு 10.22 மணிக்கு ஒரு அழைப்பைப் பெற்றனர் மற்றும் சுமார் 13 நிமிடங்களுக்குப் பிறகு, தீ ஏற்பட்ட லோரோங் சுல்தான் முகமது 1 என்ற இடத்திற்கு வந்தனர்.

பெரிய தீப்பிழம்புகள் மற்றும் அடர்த்தியான புகை வெகு தொலைவில் இருந்து பார்க்க முடிந்தது. தீயணைப்பு வீரர்கள் ஐந்து தீயணைப்பு வண்டிகள் மற்றும் ஆறு தண்ணீர் டேங்கர்கள் உதவியுடன் தீயை கட்டுக்குள் கொண்டுவர சுமார் 16 நிமிடங்கள் பிடித்தன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here