ஆடம்பர பொருட்களுக்கான வரி மே 1, 2024 முதல் அமல்படுத்தப்படும் – அன்வார்

கோலாலம்பூர்:

டம்பர பொருட்களுக்கான வரி (HVGT) மே 1, 2024 முதல் அமல்படுத்தப்படும் என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

“இந்த நேரத்தில், அதிக மதிப்புள்ள அல்லது ஆடம்பர பொருட்களுக்கு வரி விதிப்பதற்கான கொள்கை மற்றும் சட்ட அம்சங்களை முடிவு செய்யும் இறுதி கட்டத்தில் நிதி அமைச்சகம் உள்ளது” என்று நவம்பர் 1 தேதியிடப்பட்ட ஒரு எழுத்துப்பூர்வ பதிலில் பிரதமர் இன்று நாடாளுமன்றத்தில் கூறினார்.

நிதி அமைச்சகம் மற்றும் சுங்கத் துறை மூலம் பல்வேறு பங்குதாரர்களிடமிருந்து பெறப்பட்ட உள்ளீடுகளை கணக்கில் எடுத்துக்கொண்டு, தாம் கொள்கைகள் மற்றும் சட்டங்களை உருவாக்குவதாக நிதியமைச்சராகவும் இருக்கும் அன்வார் கூறினார்.

கடந்த அக்டோபர் 13 அன்று 2024ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது, ​​அரசு 5% முதல் 10% வரையிலான விகிதத்தில் ஆடம்பர பொருட்களுக்கு HVGT ஐ அறிமுகப்படுத்தும் என்று அன்வார் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here