முடிதிருத்தும் கடைகள், சந்தைகள் உட்பட 11 பொருளாதார நடவடிக்கைக்கு நாளை முதல் அனுமதி

கோலாலம்பூர்: தேசிய மீட்பு திட்டத்தின் (NRP) முதல் கட்டத்தின் கீழ் (Phase 1) மாநிலங்களில் மேலும் 11 பொருளாதார நடவடிக்கைகளை அரசு நாளை முதல் அனுமதிக்கும்.

சுகாதார அமைச்சகம், உள்நாட்டு வர்த்தகம் மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சகம் ஆகியவற்றால் மேற்கொள்ளப்பட்ட இடர் பகுப்பாய்வு மற்றும் அந்தந்த வர்த்தகத்தில் பங்குதாரர்களுடன் கலந்துரையாடிய பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பிரதமர் முஹிடின் யாசின் கூறினார்.

11 பொருளாதார நடவடிக்கைகளாக;
1. கார் கழுவும் மையங்கள்;
2. மின் மற்றும் மின்னணு கடைகள்;
3. வீட்டுப் பொருட்கள் மற்றும் சமையலறைப் பொருட் கடைகள்;
4. மரச்சாமான்கள் கடைகள்;
5. விளையாட்டு உபகரணக் கடைகள்;
6. கார் உதிரிப்பாகக் கடைகள்;
7. கார் விற்பனை மற்றும் விநியோக மையங்கள்;
8. காலை சந்தைகள் மற்றும் விவசாய சந்தைகள்;
9. ஃபேஷன் மற்றும் ஆபரண மையங்கள்;
10. நகைக்கடைகள்; மற்றும்
11. சிகையலங்கார நிலையங்கள், மற்றும் அழகு நிலையங்கள் (முடி வெட்டுவதற்கு மட்டுமே).

போன்ற நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here