தப்பிக்க முயன்ற ஆப்கானிஸ்தான் கால்பந்து வீரர் ஜக்கி அன்வாரி.. விமானத்தில் இருந்து தவறி விழுந்து பலி

காபூல்: ஆப்கானிஸ்தான் தேசிய அணி கால்பந்து வீரரான ஜக்கி அன்வாரி காபூல் விமான நிலையத்தில் அமெரிக்க விமானத்தில் இருந்து தவறி விழுந்து இறந்தார் என்று ஆப்கானிஸ்தான் செய்தி நிறுவனம் அரியானா தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 15ம் தேதி தாலிபன்கள் காபூலை கைப்பற்றிய பின்னர் ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பிக்க ஏராளமான மக்கள் விரும்புகிறார்கள். பலர் அண்டை நாடுகளுக்கு தப்பி ஓடிவிட்டார்கள்.

இன்னமும் பலர் தாலிபன்களிடம் இருந்து தப்பிப்பதற்காக காபூல் விமான நிலையத்தில் குவிந்தனர், பலர் ஓடும் விமானத்தில் ஏற முயன்றனர்.

தவறி விழுந்தார்

அபபடித்தான் ஆப்கானிஸ்தான் தேசிய அணி கால்பந்து வீரரான ஜக்கி அன்வாரி அமெரிக்காவின் போயிங் சி -17 விமானத்தில் ஏற முயன்றுள்ளார், அப்போது நடுவானில் புட்போர்ட் அடித்த அவர் தவறி விழுந்து பலியாகி உள்ளார். அந்நாட்டு விளையாட்டு ஆணையம் இதனை உறுதி செய்துள்ளது.

காபூல்

தலிபான்கள் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை கைப்பற்றிய மறுநாள் திங்கட்கிழமை ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த ஆயிரக்கணக்கான ஆப்கானியர்களில் கால்பந்து வீரரான ஜக்கி அன்வாரியும் ஒருவர்.

உயிரிழப்பு

நாட்டிலிருந்து எப்படியாவது விமானத்தில் சென்றுவிடலாம் என்ற நம்பிக்கையில். அவர் காபூலில் இருந்து புறப்படவிருந்த சி -17 விமானத்தில் ஏறி இருக்கிறார். ஆனால் விமானத்தில் இருந்து தவறி விழுந்து இறந்துபோனார். அவரது உடல் பாகங்கள் கண்டெக்கப்பட்டுள்ளது. அதை அந்நாடு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

அபுதாபியில் குடியேற்றம்

முன்னதாக காபூலில் அரசபடைகள் தலிபான்களிடம் சரணடைந்த பின்னர், அதிபர் அஷ்ரப் கானி தனது உதவியாளர்களுடன் ஆகஸ்ட் 15 அன்று ஆப்கானிஸ்தானிலிருந்து தப்பிச் சென்றார். காபூல் நியூஸின் சமீபத்திய அறிக்கையின்படி, காபூலில் இருந்து ஏராளமான பணம் நிரப்பு சூட்கேஸ்களுடன் அஷ்ரப் கனி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைநகர் அபுதாபியில் குடியேறியதாக கூறியுள்ளது.

தேசிய கொடி மாற்றம்

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் கொடிக்கு பதிலாக தங்களின் வெள்ளை கொடியை தாலிபான் பயன்படுத்தி வருகிறார்கள். தங்கள் ஆட்சியின் கீழ் நாட்டின் புதிய கொடியாக தாலிபான்கள் வெள்ளை கொடியை முன்னிறுத்தி வருகிறார்கள். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. போராடிய மக்கள் துப்பாக்கிச்சூட்டில் பலியாகி உள்ளனர். எத்தனை பேர் இறந்தார்கள் என்பது தெரியவில்லை.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here