ஒன்றுவிட்ட சகோதரியை திருமணம் செய்த பிரபல மோட்டார் பந்தய வீரர்!

போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த மோட்டோ ஜிபி மோட்டார் சைக்கிள் பந்தய வீரர் மிகுவெல் ஆலிவீரியா (miguel oliveira) தனது ஒன்றுவிட்ட சகோதரியை திருமணம் செய்த சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மோட்டோ ஜிபி என்பது உலகளவில் மிகவும் பிரபலமான பைக் ரேஸ் ஆகும் . இந்த போட்டிகளில் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ள ரைடர் போர்ச்சுகலைச் சேர்ந்த மிகுவெல் ஒலிவீரியா (miguel oliveira) (26). இவர் தனது நீண்ட நாள் பெண் தோழி ஆண்ட்ரியா பிமென்டாவை (25) திருமணம் செய்துகொண்டுள்ளார். ஆனால், இந்தத் திருமணம் அனைவராலும் வரவேற்கப்படவில்லை.

இருவருக்கும் 11 ஆண்டுகளாகவே நெருக்கமான உறவு இருந்துள்ளது. 2019ல் இது வெளியுலகுக்கும் தெரியவந்த நிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இது குறித்து மிகுவெல் (miguel oliveira) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,

நாங்கள் எங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான திருப்பத்தை சந்தித்துள்ளோம். நாங்கள் எங்களின் காதலுக்கு திருமண வடிவம் கொடுத்துள்ளோம். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். நான் எனது வாழ்க்கையை எனது மனைவியுடன் எனது மறுபாதியுடன் பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என பதிவிட்டுள்ளார்.

இதேவேளை முன்னதாக, தனது காதல் கதை குறித்து தி சன் பத்திரிகைக்கு மிகுவெல் அளித்திருந்த ஒரு பேட்டியில், எங்களுக்குள் காதல் அரும்புவதற்கு முன்னதாக நீண்ட நாள் நட்பு இருந்தது. நாங்கள் ஒன்றாக வளர்ந்தோம். ஒருகட்டத்தில் எங்களுக்குள் நட்பைத் தாண்டியும் ஏதோ இருந்தது தெரிந்தது. அது ஆழமான காதல் என்பதைப் புரிந்து கொண்டோம். அடுத்த ஆண்டு நாங்கள் திருமணம் செய்து கொள்ளவிருக்கிறோம் என கூறியிருந்தார்.

மிகுவெலின் (miguel oliveira)சொந்த ஊர் போர்ச்சுகல் நாட்டில் தென் பகுதியில் உள்ள அலமாண்டா. இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு நடந்த இத்தாலியன் மோட்டார் சைக்கிள் கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் கலந்துகொண்டு சாம்பியன் பட்டம் வென்றார். போர்சுகல் நாட்டைச் சேர்ந்த ஒருவர் இந்தப் பட்டத்தை வெல்வது அதுவே முதன்முறையாக இருந்தது.

அப்போதிருந்தே போட்டி களத்துக்கு ஆண்ட்ரியா மிகுவெலுடன் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஆண்ட்ரியாவை மிகுவெலின் ஒன்றுவிட்ட சகோதரி என அறிந்திருந்தபோதும் அவர்கள் திருமணம் செய்துகொள்வார்கள் என யாரும் நினைக்கவில்லை.

எனினும் கடந்த 2, 3 ஆண்டுகளாக இது தொடர்பாக வதந்திகள் உலா வர, மிகுவெல் (miguel oliveira) வெளிப்படையாக அதனை அறிவித்தார் மிகுவெல் (miguel oliveira) தனது சிறு வயதிலிருந்து மோட்டார் ரேஸ் பைக்குகளை இயக்குவதில் ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார். அத்துடன் மோட்டோ ஜிபி கிட்ஸ் போட்டிகளிலும் இவர் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here