அமெரிக்காவின் இராணுவ வாகனங்களை பாகிஸ்தானுக்கு அனுப்பும் தாலிபான்கள்

பல கோடிகள் பெறுமதியான அமெரிக்க இராணுவத்தின் போர்த்தளபாடங்களை தாலிபான் அமைப்பை சேர்ந்தவர்கள் விரைவில் பாகிஸ்தானிற்கு கொண்டு செல்லவுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க இராணுவத்தின் ஹம்வீஸ்களையும் ஏனைய இராணுவ வாகனங்களையும் தாலிபான்கள் பாகிஸ்தானிற்கு அனுப்புவதை காணமுடிவதாக மிரர் தெரிவித்துள்ளது.

இந்த வாகனங்களை பாக்கிஸ்தானில் உள்ள பயங்கரவாதகுழுக்களிற்கு தாலிபான்கள் விற்பனை செய்யவுள்ளனர் இதன் மூலம் ஏற்கனவே பெருமளவு நிதி வசதியுடன் உள்ள அவர்கள் அதனை மேலும் அதிகரிக்கப்போகின்றனர் என அது தெரிவித்துள்ளது.

ஆப்கானின் தாலிபானின் தலைமை அலுவலகம் உள்ள பகுதி என கருதப்படும் பாகிஸ்தானின் குவட்டா நகரிற்கு அமெரிக்க இராணுவ வாகனங்களுடன் வாகனத்தொடரணி செல்வதை காண்பிக்கும் படம் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் போர்த்தளபாடங்களை விற்பனை செய்வதற்கு பாகிஸ்தானின் புலனாய்வு பிரிவினர் அனுமதி வழங்கியுள்ளனர் என கருதப்படுகின்றது.

தப்பியோடிய ஆப்கான் இராணுவம் விட்டுச்சென்ற பெருமளவு இராணுவத்தளபாடங்களும் ஆயுதங்களும் பெருமளவில் தாலிபானிடம் உள்ளன, இவை ஆப்கான் இராணுவத்திற்கு அமெரிக்க வழங்கிய போர்தளபாடங்கள் தாலிபான்கள் அவற்றை ஏற்றுமதி செய்கின்றது என பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பாகிஸ்தானின் குவட்டா நகரத்திற்கு கந்தஹாரிலிருந்து மூன்று மணி நேரத்தில் சென்றுவிடலாம். இங்கு பெருமளவு பயங்கரவாத அமைப்புகள் செயற்படுவதுடன் இங்கிருந்தே போதைப்பொருள் வர்த்தகமும் இடம்பெறுகின்றது.

குறிப்பாக ஹெரோயின் வர்த்தகம் இடம்பெறுகின்றது. இந்த பகுதியில் பஸ்தூன்களே அதிகமாக வாழ்கின்றனர், தாலிபான்களும் இந்த பழங்குடி இனத்தை சேர்ந்தவர்கள். தாலிபானின் தலைமை பேரவை இங்கேயே செயற்படுகின்றது என்று தெரிவிக்கப்படுகின்றது.

செப்டம்பர் 11 தாக்குதலின் பின்னர் அமெரிக்கா தலைமையிலான படையினர் ஆப்கானை கைப்பற்றிய வேளை தாலிபானின் முக்கிய பிரமுகர்கள் இந்த நகரிற்கே தப்பிச்சென்றனர், தாலிபான்களுக்கான பெருமளவு நிதி இந்த பகுதி ஊடாகவே சென்றடைந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here