செப்டம்பர் 15 க்கு பின் கிள்ளான் பள்ளத்தாக்கில் முற்பதிவுகள் இன்றிய (walk-in) முறையில் தடுப்பூசிகள் செல்லுத்தப்படாது

புத்ரா ஜெயா: கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள தடுப்பூசி மையங்களில் (PPV) செப்டம்பர் 15 க்குப் பிறகு வாக்-இன் (walk-in) தடுப்பூசிகள் வழங்கப்படாது என்று அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு அமைச்சர் டாக்டர் ஆதாம் பாபா இன்று தெரிவித்தார்.

இதுவரை தடுப்பூசி போடாத கிள்ளான் பள்ளத்தாக்கு குடியிருப்பாளர்களின் எண்ணிக்கை மிக குறைவாக இருப்பதாலும் வாக்- இன் தடுப்பூசி மையங்களில் குறைந்த வருகையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக முன்னாள் சுகாதார அமைச்சர் கூறினார்.

“கிள்ளான் பள்ளத்தாக்கில் வாக்-இன் தடுப்பூசிகள் செப்டம்பர் 15 க்குப் பின்னர் நிறுத்தப்படும் என்று நான் அறிவிக்க விரும்புகிறேன்,” என்று அவர் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீனுடன் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில் கூறினார்.

சில அரசாங்க சுகாதார கிளினிக்குகள் (kilinik Kesihatan) செப்டம்பர் 16 முதல் தடுப்பூசிகளை செலுத்த தொடங்கும் என்றும் அத்தகைய மருத்துவமனைகளின் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் டாக்டர் ஆதாம் கூறினார்.

வாக்-இன் முறையில் தடுப்பூசி செலுத்தும் முறை பிற மாநிலங்களில் இன்னும் வழங்கப்படும். இருப்பினும், பொதுமக்கள் அந்தந்த மாநில சுகாதாரத் துறைகளின் அறிவிப்புகளை தெரிந்து வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள் என்றார்.

இருப்பினும், நாடு முழுவதும் உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் மெட்ரிகுலேஷன் திட்டங்களில் உள்ள மாணவர்கள் தங்களது தடுப்பூசிகளுக்காக வாக்- இன் முறையில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர்கள் தங்கள் மாணவர் அட்டையைக் அங்கு காட்ட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

ஏனென்றால், பொதுப் பல்கலைக்கழகங்களில் 195,000 மாணவர்களும் (37.5%) தனியார் பல்கலைக்கழகங்களில் 51,000 (10.2%) மாணவர்களும் இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை. மேலும் செப்டம்பர் 7 நிலவரப்படி, அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் 547,595 மாணவர்கள் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதாகவும் டாக்டர் ஆதாம் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here