தன்னை தானே திருமணம் செய்து கொண்ட பிரேசில் மாடல் அழகி!

பிரேசில் நாட்டைச் சேர்ந்த 33 வயதான மாடல் அழகியான கிரிஸ் கேலரா, தனது கடந்த காலங்களில் ஏற்பட்ட உறவு முறிவுகளால் விரக்தி அடைந்து, இனி தனியாக வாழலாம் என்ற தீர்மானித்து இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மாடல் அழகி கிரிஸ் கேலராவின் திருமணம் பிரேசிலின் பிரபல கத்தோலிக்க தேவாலயத்தில் நடைபெற்றது. திருமண நிகழ்ச்சியில் கிரிஸ் கேலராவின் நண்பர்கள், உறவினர்கள் கலந்து கொண்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு உள்ளன.

திருமணம் குறித்து மாடல் அழகி கிரிஸ் கேலரா கூறியபோது, “நான் எப்போதும் எனது வாழ்கையில் தனியாக இருக்க பயம் கொள்வேன். ஆனால் தற்போதைய என்னுடைய நிலைமை குறித்து நான் மகிழ்ச்சி கொள்ள வேண்டும் என நான் உணர்ந்து இருக்கிறேன். அதனை உணர்ந்த நிலையில் அதனை நான் கொண்டாட வேண்டும் என முடிவு செய்து, இந்த திருமணத்தை செய்துக் கொண்டேன். என்னை நானே திருமணம் செய்து கொள்வது அற்புதமாக இருந்தது ” என்று அவர் கூறினார்.

இந்நிலையில் மாடல் அழகி கிரிஸ் கேலராவின் இந்த முடிவை பலரும் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். இதற்கு பதிலளித்த அவர், “என்னை மற்றவர்களிடம் நிரூபிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. நான் அவர்களின் கருத்துக்களை பார்ப்பதில்லை” என்று பதிலளித்து இருக்கிறார்.

முன்னதாக கடந்த 2020 ஆம் ஆண்டு பட்ரிசியா கிறிஸ்டின் என்ற பெண் தன்னை தானே திருமணம் செய்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here