விமான நிலையத்தை நோக்கி செல்லும் பாதையான
லெபுராயா கேவாஜிபன், சுல்தான் அப்துல் அஜீஸ் சாலையில் நேற்று (செப்டம்பர் 9) இரவு ஏற்பட்ட விபத்து ரசாயன கசிவுக்கு வழிவகுத்தது.
சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உதவி இயக்குநர் (செயல்பாடுகள்) ஹபிஷாம் முகமது நூர், வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 10) தொடர்பு கொண்டபோது. வியாழக்கிழமை இரவு 9.16 மணியளவில் இச்சம்பவம் குறித்து துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக ஒரு ஹஸ்மத் குழு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டது அவர் மேலும் கூறினார்.
சம்பவ இடத்தில், 20 டன் லோரி கவிழ்ந்ததால் கசிவு ஏற்பட்டதாகவும் அது சுமார் 30 மீட்டர் வரை பதவி இருந்ததாகவும் தெரிவித்தார்.
இந்த ரசாயனம் ஒரு நிலை எட்டு ரசாயன சிராய்ப்பு என அடையாளம் காணப்பட்டது மற்றும் துப்புரவு நடவடிக்கை இன்று (செப்.10) அதிகாலை 4 மணிக்கு முடிந்தது என்று அவர் கூறினார்.





















