40 ஆண்டுகளாக தூங்கவே இல்லை என்கிறார் சீனாவின் லி ஜானிங் என்ற பெண்.

சீனாவைச் சேர்ந்த ஒரு பெண், 40 ஆண்டுகளாக தூங்காமல் விழித்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சீனாவின் ஹெனான் மாகாணத்தைச் சேர்ந்தவர் லி ஜானிங். இவர், தனது 5 வயதில் தான் கடைசியாக தூங்கி உள்ளார். ஆரம்பத்தில் அக்கம் பக்கத்தினர் இவர் பொய் சொல்கிறார்கள் என கருதினர். எனவே அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சிலர், இரவு முழுவதும், லி ஜானிங் உடன் விழித்திருக்க முயற்சித்து அவருடன் விளையாடி உள்ளனர். ஆனால், மற்றவர்கள் தூங்கவே, லி ஜானிங் மட்டும் தூங்காமல் விழித்திருந்தார்.

இது குறித்து கருத்துத் தெரிவித்த லி ஜானிங்கின் கணவர் லூயி சுவோகின், தனது மனைவி தூங்குவதை பார்த்ததில்லை என்று கூறினார். அவர் ஓய்வெடுப்பதற்கு பதிலாக இரவு நேரங்களில் வீட்டை சுத்தம் செய்வதாக கணவர் லூயி சுவோகின் தெரிவித்தார். தூக்கமின்மை என்று நினைத்து லி ஜானிங்கிற்கு தூக்க மாத்திரைகளை லூயி சுவோகின் வாங்கி கொடுத்தார். எனினும், மருந்துகள் வேலை செய்யவில்லை.

லி ஜானிங் மருத்துவர்களை அணுகிய போது, அவர்களால் மருத்துவ விளக்கம் அளிக்க முடியவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து, பெய்ஜிங்கில் உள்ள ஒரு சிறப்பு தூக்க மையத்திற்கான சமீபத்திய பயணம் லி ஜானிங்கின் தூக்கமில்லாத இரவின் மர்மத்தை தீர்த்துள்ளது.

லி ஜானிங்கின் கண்கள் குறைந்து அவள் உண்மையில் தூங்குவதை மருத்துவர்கள் கவனித்தனர். மூளைச்சலவை மானிட்டர் மூலம் நடத்தப்பட்ட சோதனையில், லி ஜானிங்கின் கண்கள் ஒரு நாளைக்கு 10 நிமிடங்களுக்கு மேல் மூடப்படாது என்பதைக் காட்டுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here