எதிர்வரும் செப். 28 இரவு 9 மணி முதல் இரு நாட்களுக்கு உலு லங்காட்டின் 5 பகுதிகளில் நீர் விநியோகத்தடை

பெட்டாலிங் ஜெயா: உலு லங்காட்டில் உள்ள ஐந்து பகுதிகளில் செப்டம்பர் 28 இரவு 9 மணி தொடங்கி இரண்டு நாட்களுக்கு திட்டமிடப்பட்ட நீர் விநியோகத்தடை ஏற்படும் .

தாமான் ஸ்ரீ இன்டா பலாகோங், செராஸ் நுழைவாயில் மற்றும் சுரங்கங்களுக்கு முன்னால் உள்ள முக்கிய டிவைடர் துணை மின்நிலையம் – மூன்று இடங்களில் பராமரிப்பு பணி மற்றும் வால்வுகளை மாற்றுவதன் பொருட்டு இந்த நீர் விநியோகத்தடை நடைமுறைப்படுத்தப் படுகிறது என்று ஆயர் சிலாங்கூர் அறிவித்துள்ளது.

பலாகோங்,, கிரீன் பார்க் குடியிருப்பு, பண்டார் சுங்கை லோங் (SL 6,9,10,11), தாமான் புக்கிட் பால்மா மற்றும் பண்டார் மக்கோத்தா செராஸ் (ஜாலான் புத்ரா, ஜாலான் புத்ரி, ஜாலான் பெண்டஹரா மற்றும் ஜாலான் மக்கோத்தா) ஆகிய ஐந்து பகுதிகளில் இந்த நீர் விநியோகத்தடை நடைமுறைப்படுத்தப்படும்.

ஆயர் சிலாங்கூர் கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் தலைவர் எலினா பசேரி இது பற்றிக் கருத்து தெரிவித்த போது, எதிர்காலத்தில் சிறந்த நீர் விநியோகத்தை உறுதி செய்வதற்காக சுருஹன்ஜயா பெர்கிமாத்தான் ஆயர் நெகாரா (SPAN) ஆல் அங்கீகரிக்கப்பட்டதாக கூறினார்.

“நீர் விநியோகம் கட்டம் கட்டமாக விநியோகிக்கப்படும் என்றும் செப்டம்பர் 30 காலை 6 மணிக்கு முழுமையாக மீட்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்றும் அவர் கூறினார்.

நுகர்வோர் வளாகத்தின் தூரம் மற்றும் விநியோக அமைப்பில் உள்ள நீர் அழுத்தத்தைப் பொறுத்து, நீர் விநியோகச் சீர்குலைவு மற்றும் மீட்பு காலம் பகுதிகளில் மாறுபடும் என்றும் அவர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here