24 மணி நேரத்தில் 15 தடவை பூமியை சுற்றி வந்த விண்வெளி சுற்றுலா குழு; அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தகவல்

அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் சார்பில் விண்வெளி சென்றுள்ள சுற்றுலாக்குழு ஒரே நாளில் 15 முறை பூமியைச் சுற்றி வந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகப் பெரும் கோடீஸ்வரரான எலான் மஸ்க்கின் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம் விண்வெளி சாா்ந்த ஆய்வில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் விண்வெளி வீரா்கள் அல்லாத சாதாரண பொதுமக்கள் 4 பேரை தனது ஃபால்கன் ராக்கெட் மூலம் புதன்கிழமை விண்வெளிக்கு அனுப்பியது.

ஃபுளோரிடாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து புதன்கிழமை இரவு இந்த ராக்கெட் செலுத்தப்பட்டது. புறப்பட்ட 12-ஆவது நிமிஷத்தில் ராக்கெட்டிலிருந்து ‘டிராகன்’ எனப்படும் விண்கலம் தனியாகப் பிரிந்தது.

பூமியிலிருந்து 160 கி.மீ. உயரத்தில் (சா்வதேச விண்வெளி நிலையத்துக்கும் அதிக உயரத்தில்) இந்த விண்கலம் பூமியின் சுற்றுவட்டப் பாதையில் மூன்று நாட்கள் சுற்றி வரும்.

இந்நிலையில் விண்வெளி சென்றுள்ள இந்தக் குழுவானது விண்ணுக்கு சென்ற ஒரே நாளில் 15 முறை பூமியைச் சுற்றி வந்துள்ளனர்.

ஒரு மணி நேரம் 30 நிமிடங்களுக்கு ஒருமுறை நிலவை சுற்றி வரும் இந்தக் குழு இன்னும் 2 நாள்கள் விண்ணில் தங்க உள்ளனர்.

பின்னா், ஃபுளோரிடா கடலில் விண்கலம் தரையிறங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் இந்த விண்வெளி பயணமானது விண்வெளி சுற்றுலாவிற்கான புதிய மைல்கல்லாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here