கொரோனாவால் நாடுகள் முடக்கப்பட்டதால், பிள்ளைகளின் கண்பார்வை மோசமாகி இருக்கலாம்; சீனாவின் ஆய்வில் முடிவு

கொரோனா கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த நாடுகள் அமல்படுத்திய பொதுமுடக்கத்தால், சிறு பிள்ளைகளின் கண்பார்வை மோசமாகி இருக்கலாம் என்று ஓர் அண்மைய  ஆய்வு கூறியுள்ளது. ‘ஜாமா’ கண் மருத்துவ ஆய்வுச் சஞ்சிகை அந்த ஆய்வை வெளியிட்டது.

சீனாவின் சன் யாட் சென் பல்கலைக்கழகத்தின் பொதுச் சுகாதாரப் பள்ளி இந்த ஆய்வை நடத்தியது. சீனாவின் குவாங்சோ மாநிலத்தில் உள்ள தொடக்கப்பள்ளிகளைச் சேர்ந்த 2,000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு 2018 இருந்து, சென்ற ஆண்டு வரை செய்யப்பட்ட கண் பரிசோதனைகளின் முடிவுகள் ஆய்வு செய்யப்பட்டன.

கடந்த 2019ல் இரண்டாம் வகுப்பில் படித்த பிள்ளைகளில் 20 விழுக்காட்டுக்கும் அதிகமானவர்களின் கண்பார்வை ஓராண்டில் குறைந்தது.

ஒப்பிட்டு பார்க்கும் போது, 2018ல் கண் பரிசோதனை செய்துகொண்ட பிள்ளைகளில் 13 விழுக்காட்டினருக்குத்தான் கண்பார்வை மங்கியது. ஆனால் ஒன்பது, பத்து வயதுப் பிள்ளைகளின் கண்பார்வையில் பொதுமுடக்கத்தால் பெரிய மாற்றம் ஏற்படவில்லை என்று ஆய்வு கூறியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here