சோமாலியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியரின் நிலையை வெளியுறவு அமைச்சகம் கண்காணிக்கும்

அல்-ஷபாப் கும்பல் செயல்பாடுகளில் ஈடுபடுவதற்காக சோமாலியாவுக்குள் நுழைந்ததாகக் கூறப்படும் மலேசிய நபர் மீது விதிக்கப்பட்ட தடுப்பு மற்றும் சட்ட நடவடிக்கைகளை வெளியுறவு அமைச்சகம் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது என்று அதன் அமைச்சர் டத்தோ சைபுதீன் அப்துல்லா  கூறுகிறார்.

சூடானின் கார்டூமில் உள்ள மலேசிய தூதரக அதிகாரிகள் அஹ்மத் முஸ்தகிம் அப்துல் ஹமீத் என்ற ஆடவரின் நலன் உறுதி செய்வதற்காக தூதரக விஜயத்தை மேற்கொண்டதாக அவர் கூறினார்.

அமைச்சகம் இந்த வழக்கின் முன்னேற்றங்களை தொடர்ந்து கண்காணித்து, அவரின் உரிமைகள் மற்றும் நலன் எப்போதும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதன் மூலம் அவருக்கு தேவையான உதவிகளை வழங்கும்.மேலும் சட்டப்படி அவருக்கு நியாயமான விசாரணை கிடைக்கும். மேலும் அவரது உடல்நிலை குறித்து  அவரது குடும்பத்தினரையும் தொடர்பு கொண்டோம்.

சனிக்கிழமையன்று (செப்டம்பர் 18) இங்குள்ள இந்திரா மஹ்கோத்தா நாடாளுமன்ற சேவை மையத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அவர், அந்தந்த நாட்டின் சட்டங்களை நாம் மதிக்க வேண்டும். மேலும் தூதரக பிரதிநிதிகளை அவ்வாடவரின் நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்து கொள்ளுமாறு நாம் கேட்கலாம் என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here